Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினி படத்திற்கே இந்த நிலையா? புக்கிங்கில் காற்று வாங்கும் லால் சலாம்

ரஜினி படத்திற்கே இந்த நிலையா? புக்கிங்கில் காற்று வாங்கும் லால் சலாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீசாக உள்ள லால் சலாம் திரைப்படத்திற்கு மக்கள் ஆர்வம் காட்டாதது திரைப்படத்துறையை  அதிர்ச்சியில் ஆக்கியிருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் ரிலீசானது. ட்ரெய்லர் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் இந்த படத்தின் மீது ஆவலை தூண்டும் விதமாக இல்லை. இதற்கு காரணம் ரஜினி படத்தில் பேசுவதும் நிஜ வாழ்க்கையில் பேசுவதும் வேறொன்றாக இருப்பதால் அது மக்களிடையே  எடுப்படுவதில்லை.

மத வேறுபாடுகளை பார்க்கக்கூடாது என்று படத்தில் பேசும் ரஜினி, நேரில் பாபர் மசூதி இடித்து கட்டப்பட்ட கோவிலுக்கு சென்று கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ரஜினியை பலரும் சங்கி என்று கூறி வரும் நிலையில் அதற்கு அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் தரவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் புக்கிங் நேற்று தொடங்கப்பட்டது. சன் டிவியில் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என ரசிகர்கள் நம்பினார்.

- Advertisement -

மேலும் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. ஆனால் அது எதுவுமே எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படங்கள் பெரிய வசூலை பெறாத நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகவே இல்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் படம் இந்த நிலையை மாற்றும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் கூட ஒரு சீட்டு கூட புக்கிங் ஆகாத நிலையில் தான் இருக்கிறது. இதற்கு காரணம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பழைய சம்பவங்களும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடும் தான் என்று திரைத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே விஜய் சினிமாவை விட்டு செல்கிறேன் என்று கூறிய நிலையில் தற்போது ரஜினி படங்களும் காற்று வாங்குவது தமிழ் சினிமாவுக்கு அபாய கட்டமாக இருக்கிறது.

Most Popular