Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாதமிழ் மக்களின் எதிரி லால் சலாம் திரைப்படத்தின் கதாநாயகியா..? ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ப்ளூ சட்டை மாறன்...

தமிழ் மக்களின் எதிரி லால் சலாம் திரைப்படத்தின் கதாநாயகியா..? ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ப்ளூ சட்டை மாறன் வைத்த அடுத்த ஆப்பு..!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் எடுக்கப்பட்ட நாளிலிருந்து பல சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் மத அரசியல் பின்னணி என்று விமர்சனம் எழுகிறது.

சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய தந்தை சங்கி இல்லை என்று கூறியதை வச்சு செய்தார் ப்ளூ சட்டை மாறன்.

- Advertisement -

இதுவெல்லாம் பத்தாது என்று புதிதாக ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன் தமிழில் எத்தனையோ கதாநாயகிகள் இருக்கும் நிலையில் கர்நாடகாவில் இருந்து தனியா பாலகிருஷ்ணனை கதாநாயகியாக ஆக்கியது ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி.

- Advertisement -

தனியா பாலகிருஷ்ணன் தமிழ் மக்களை பிச்சைக்காரர்கள் என்று குத்தி காட்டிய ஒரு நடிகை .தண்ணீருக்காக பிச்சை கேட்கிறீர்கள். அதை நாங்கள் தருகிறோம். அழகிய உரை நாசம் செய்து விட்டீர்கள் என்றும் ட்விட் செய்த தன்யா பாலகிருஷ்ணனுக்கு எதிராக என்று ஹாஷ்டாக்குகள் செய்ததை தொடர்ந்து இனி நான் தமிழ் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று கூறியவர் எந்த தைரியத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்தார்.

தமிழையும் ,தமிழ் மக்களையும் இப்படி அவமதித்த ஒரு நடிகையை எந்த அடிப்படையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய திரைப்படத்தின் கதாநாயகியாக ஆக்கினார் என்று கேள்வியை ரசிகர்களுக்கு முன் வைத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன் மேலும் இதைப் பற்றி எல்லாம் ரசிகர்களுக்கு என்ன கவலை திரைப்படத்தை என்ஜாய் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

மேலும் இப்படி எல்லாம் தமிழ் மக்களை பேசிவிட்டு தமிழ் சினிமாவில் நடிக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா என்றும் நெட்டிசன்கள் தனியா பாலகிருஷ்ணனை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே இந்த திரைப்படம் வெளியிடுவதில் பல தயக்கங்களுடன் பட குழுவினர்கள் காத்திருக்கும் இந்த நிலையில் இது போன்று அடுக்கடுக்காக சர்ச்சைகள் கிளம்புகின்றது. இத்திரைப்படம் எப்பொழுது வெளியிடப்பட்டு இதுபோன்ற விமர்சனங்களை பெற இருக்கிறதோ என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

Most Popular