Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாலால் சலாம், சிங்கப்பூர் சலூன், மலைக்கோட்டை வாலிபன் ஒடிடி ரிலீஸ் எப்போது? முழு விவரம்..!

லால் சலாம், சிங்கப்பூர் சலூன், மலைக்கோட்டை வாலிபன் ஒடிடி ரிலீஸ் எப்போது? முழு விவரம்..!

எந்த ஒரு பெரிய நடிகர்களின் திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெருமளவிற்கு வெளியிடப்படாததால் தமிழ் சினிமாவை வறண்டு போய் இருக்கிறது என்பதே பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

- Advertisement -

தளபதி விஜயும் அரசியலுக்கு வரப்போவதாக கூறிவிட்டு இன்னும் ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே நடிக்க போவதாகவும் அறிக்கையை விடுத்திருக்கிறார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வெளிவந்த லால் சலாம் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி விஜய், சூர்யா, சூப்பர் ஸ்டார், தனுஷ் ,சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எல்லாம் வெளியிடப்படாமல் முடங்கி இருப்பதே தமிழ் சினிமாவை மிகவும் பின்தள்ளி இருக்கிறது. பொழுதுபோக்கிற்காக ரசிகர்கள் சினிமாவை தேர்ந்தெடுத்தால் பார்ப்பதற்கு நல்ல திரைப்படம் இல்லை என்று கூறுகிறார்கள்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க தற்பொழுது வெளிவந்த லால் சலாம் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் netflix ஓ டி டி தளத்தில் வெளிவர போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திரைப்படத்தின் மீது பல சர்ச்சைகள் இருப்பதால் பல ரசிகர்களை திரைப்படத்தில் திரையரங்கில் சென்று காண்பதை தவிர்த்து விட்டார்கள். இருப்பினும் திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவர்கள் ஓடிடியில் திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் திரைப்படம் வெளிவரும் என்ற இந்த தகவல் மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

- Advertisement -

அதேபோல் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளிவந்த சிங்கப்பூர் சலூன் என்ற ஆர் ஜே பாலாஜியின் திரைப்படம் பிப்ரவரி 26 ஆம் தேதி டென்ட் கொட்டாய் என்று சொல்லப்படும் வெளிநாட்டு ஓடிடிகளில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவில் எப்பொழுது வெளிவரும் என்பது தெரியவில்லை .

அதேபோல் மலையாளத்தில் பிரபல நடிகர் மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் என்ற திரைப்படமும் பிப்ரவரி 26 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடப்படும் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

Most Popular