Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாபெரும் இடி வாங்கிய அமீர் கான்..லால் சிங் சத்தா முதல் நாள் வசூல் விவரம்..

பெரும் இடி வாங்கிய அமீர் கான்..லால் சிங் சத்தா முதல் நாள் வசூல் விவரம்..

- Advertisement -

நாட்டிலே பெரிய திரைப்படத்துறையான பாலிவுட் தற்போது சோதனை காலத்தில் தவித்து வருகிறது. கொரோனா பாதிப்பிற்குப் பிறகு பாலிவுட்டில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் மண்ணைக் கவியது. இதில் குறிப்பாக அக்சய் குமார் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியது. கங்கனா ராவத் நடித்த டக்காட் படம் பத்தாவது நாள் வசூல் வெறும் 2000 ரூபாய் மட்டுமே பெற்றது.

இதேபோன்று பாலிவுட்டின் இளம் சூப்பர் ஸ்டார் ஆக கருதப்படும் ரன்பீர் கபூர் நடித்த சம்சீரா திரைப்படம் 150 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் ஒட்டு மொத்தமாகவே 40 கோடி ரூபாய் வசூலை தான் செய்தது.மற்றொரு சூப்பர் ஸ்டார் ஆன ரன்வீர் சிங் திரைப்படம் முதல் நாளில் நான்கு கோடி ரூபாய் மட்டும் தான் வசூல் செய்தது.

- Advertisement -

ஆனால் ஹிந்தியில் வெளியான தென்னிந்திய திரைப்படங்களான ட்ரிபிள் ஆர், கே ஜி எஃப் 2 ஆகிய திரைப்படங்கள் பெரும் வசூலை வாரி குவித்தது.இதனால் பாலிவுட் திரைப்படங்கள் தங்களது மவுசை இழந்து வருகிறது. இந்த நிலையில் பாலிவுட்டின் போதாத காலத்தை அமீர்கான் மாற்றுவார் என்று எதிர்பார்ப்பு திரைப்பட வல்லுநர்கள் மத்தியில் நிலவியது. ஆனால் லால் சிங் சத்தா திரைப்படமும் முதல் நாள் வசூலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது தான் என்று கூறப்படுகிறது .

- Advertisement -

பாலிவுட்டில் தங்களது வாரிசுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததால், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த சுசாந்த் சிங் ராஜ்புட் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை பாலிவுட் திரைப்படங்களை தொடர்ந்து புறக்கணிப்போம் என்று ஒரு கும்பல் சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்து வருகிறது. ஒவ்வொரு பெரிய படங்கள் வரும் போதும் அந்தப் படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் அந்த கும்பல் பிரச்சாரம் செய்து வருகின்றது.

லால் சிங் சத்தா திரைப்படம் பிரபல ஹாலிவுட் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் ரீமேக் ஆகும்.ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படம் இதுவரை வெளிவந்ததிலே சிறந்த திரைப்படங்களில் ஒன்று என பெயர் பெற்றது. இதனால் அந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதால் அமீர்கான் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் முன்வைக்கப்பட்டதால் அதன் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லால் சிங் சத்தா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து முதல் கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படம் 12 இலிருந்து 14 கோடி ரூபாய் வரை முதல் நாளில் வசூல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோன்று அக்ஷய் குமார் நடித்த ரக்ஷா பந்தன் என்ற திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றும் 8 கோடி ரூபாய் மட்டுமே வசூல் பெற்றிருப்பதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

அமீர் கானுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இது மிகக் குறைவான முதல் நாள் வசூல் பெற்ற திரைப்படமாக கருதப்படுகிறது. அண்மையில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ஹிந்தியில் மட்டும் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. ஆனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன அமீர்கான் திரைப்படம் 12 இல் இருந்து 14 கோடி ரூபாய் தான் வசூல் பெற்று இருப்பது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆக்கியுள்ளது. மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே போட்ட காசை படம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular