Friday, October 4, 2024
- Advertisement -
HomeசினிமாAK61 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரல் ! விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

AK61 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரல் ! விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

தல அஜித்குமார் – ஹெச்.வினோத் மூன்றாவது முறை இணைந்து உருவாக்கும் படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முந்தைய இரண்டு படங்களைப் போல இதையும் போனி கப்பூரே தயாரிக்கிறார். ஹைதராபாத் நகரத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து பணிபுரிந்து வருகிறது படக்குழு. அந்த செட்டின் புகைப்படங்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் இயக்குனர் வினோத் மற்றும் நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் அடங்கும்.

- Advertisement -

‘ யூவர் பேங் ‘ என்று பெயரிடப்பட்ட வங்கியின் முன் காவல் அதிகாரி ஒருவர் நின்றிருக்கும் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. அதோடு அஜித்குமாருக்கு தல எனும் பெயரை வைத்த மகாநதி ஷங்கரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவர் கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்கிறார். படத்தின் அறிவிப்பு வந்த போதே, இது வங்கி கொள்ளை பற்றிய கதை எனும் செய்திகள் கசிந்தன. மேலும், அஜித்குமார் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறி வந்தனர். ஆனால் இது பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.

இருப்பினும் ரசிகர்கள் அனைவரும் வங்கியில் ஓர் சிறப்பான ஆக்க்ஷன் காட்சியை எதிர்பார்த்து பெரும் இன்பத்தில் குதித்துக் கொண்டுள்ளனர். 2017ஆம் ஆண்டு அஜித்குமாரிடம் இயக்குனர் ஹெச்.வினோத் இந்தக் கதையைக் கூறினார். இருந்தும் நேர்க்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்கள் வெளியாகிய பின்பே இந்த ஆண்டு மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பித்தது.

- Advertisement -

வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெறவில்லை. படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் ஓவர்டோஸ். மிக அற்புதமாக செதுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சிகள் மட்டுமே திருப்திபடுத்தியது. ஆனால் இது அனைத்தும் இம்முறை இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் த்ரில்லர் வடிவில் படம் தயாராகி வருகிறது. இசையமைப்பு வேலைகளை கிபாரான் பார்க்கிறார். படத்தில் எந்த பாட்டும் இல்லாததால் தரமான பிஜிஎம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்பட வேலைகள் அனைத்தும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிவடையுள்ளது.

- Advertisement -

ஃபர்ஸ்ட் லூக் மற்றும் படத்தின் டைட்டீல் அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி அஜித்குமாரின் 30வது சினிமா ஆண்டுவிழா அல்லது ஆகஸ்ட் 13ஆம் தேதி மறைந்த போனி கப்பூர் மனைவி ஶ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று இந்தப் படத்தின் முதல் அப்டேட் வெளியாகும் என அனைவரும் நம்புகின்றனர். ஆனால் படக்குழு அறிவிக்காத வரை இது நிச்சயம் இல்லை.

Most Popular