Monday, May 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்பணத்திற்காக என்னை மட்டுமல்ல..பலரையும் விக்ரம் காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார்.. கிருபா பதிலடி

பணத்திற்காக என்னை மட்டுமல்ல..பலரையும் விக்ரம் காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார்.. கிருபா பதிலடி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 பங்கு பெற்று பிரபலமானவர் அரசியல்வாதி விக்ரம். பிக் பாஸில் இருக்கும் பொழுது இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு நல்ல மரியாதையான எண்ணம் இருந்தது அப்படித்தான் இவரும் நடந்து கொள்வார்.

- Advertisement -

பெண் கண்டஸ்டன்டுகளிடம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்வார். ஒரு நண்பரை போல ,சகோதரனைப் போல பாசம் காட்டி பாதுகாப்பாக இருந்து வந்தார்.விக்ரம் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் இன் வெற்றியாளராக விக்ரம் தான் ஆகி இருக்க வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் புகழாரம் பூட்டி வந்தார்கள்.

இப்படிப்பட்ட விக்ரமின் மீது தற்பொழுது ஒரு சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு அடித்தட்டு குடும்பத்தில் பிறந்த பெண் வழக்கறிஞரை விக்ரம் காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ்க்கு வருவதற்கு முன்பு விக்ரம் அந்த பெண்ணிடம் தான் காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளையும் பேசி அவரிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். மேலும் பிக் பாஸை விட்டு வந்த பிறகு அந்த காசையும் அவரிடம் கொடுத்து விட்டு இனி உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்பது போல் விலகி விட்டாராம்.

- Advertisement -

வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும் நான் சொல்லிவிட்டு தான் பிரிந்தேன் என்றும் விக்ரம் கூறுகிறார். ஆனால் வழக்கறிஞர் கிருபா என்னை விக்ரம் பண மோசடி செய்துவிட்டார் என்றும் இது போல அவர் பல பெண்களிடம் தான் காதலிப்பதாக கூறி பணங்களை பறித்துக் கொண்டு இன்று கைவிட்டு விடுகிறார் என்றும் கூறுகிறார்.

விக்ரம் ஒரு அரசியல்வாதி என்பதால் கிருபா வழக்கறிஞராக இருந்த பொழுதும் விக்ரமின் தலைவரான திருமாவளவனிடம் சென்று முறையிட்டிருக்கிறார்.ஆனால் அதற்கு அவருக்கு சரியான பதில் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்தில் இருக்கிறார்.

வழக்கறிஞர் கிருபாவிடம் என் கட்சியிலாய் என்னை பற்றி முறையிடுகிறாய் அவர்களெல்லாம் எனக்கு தான் சாதகமாக இருப்பார்கள் என்று வழக்கறிஞர் கிருபாவை மிரட்டி விக்ரம் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் இருவரும் காதலித்த பொழுது எடுத்த புகைப்படங்களும் பேசிய வாட்ஸ் அப் மெசேஜ் களும் இணையத்தில் பரவி வருகிறது. பிக் பாஸில் பார்த்த விக்ரமா இப்படி எல்லாம் ஒரு காரியத்தை செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்த செய்தியால் விக்ரமுடைய பெயர் மட்டுமல்லாமல் அவருடைய அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

Most Popular