Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாலியோக்கு இன்னும் 67 நாட்கள் தான் இருக்கு.. இசை வெளியீட்டு விழா எங்கு? எப்போது?

லியோக்கு இன்னும் 67 நாட்கள் தான் இருக்கு.. இசை வெளியீட்டு விழா எங்கு? எப்போது?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெய்லர் திரைப்படம் சினிமா உலகையே கலக்கி வருகிறது. எந்த திரைப்படமும் தற்போது வெளியிடப்படாததால் தனிக்காட்டு ராஜாவாக கம்பீரமாக திரையரங்குகளில் போடப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஜெய்லர் திரைப்படம் தற்பொழுது வெளியிடுவது தனக்கே ஆபத்து என்றுதான் யாரும் எந்த திரைப்படத்தையும் தற்போது வெளியிடாமல் இருக்கிறார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் திரைப்படங்களில் லியோ திரைப்படமும் ஒன்றாகும்.

- Advertisement -

மேலும் லியோ திரைப்படம் தான் இந்த ஆண்டில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் கடைசி திரைப்படம் என்று கூட சொல்லலாம். அதன் பிறகு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எல்லாம் வெளிவர இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த வாரிசு துணிவு ps2 பத்து தலை என்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அதில் இவை அனைத்தும் பெற்ற வசூல் சாதனையை விட தற்பொழுது வெளியாகி இருக்கின்ற ஜெய்லர் திரைப்படம்.

எல்லா ரெக்கார்டுகளையும் பிரேக் செய்து ஒரு போக்கில் இன்னும் இரண்டு மூன்று நாட்களிலேயே இந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களிலேயே பெருமளவில் வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெயரை பெற்றுவிடும் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு வெற்றி நடை போட்டு வருகிறது ஜெய்லர் திரைப்படம்.

இதனால் இதற்குப் பிறகு வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்திற்கு பெரும் போட்டி ஏற்பட்டு விட்டது. இதைவிட வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற வேண்டும் என்பதற்காக படக்குழுவினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அதை செயல்படுத்தும் விதமாக திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை கையில் எடுத்திருக்கிறார்கள் பட குழுவினர்கள்.

ஜெயிலர் திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அந்த இசையை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது அதை மையமாகக் கொண்டு தற்போது லியோ திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் என்ற இடத்தில் இருக்கும் ஒரு உள் விளையாட்டு அரங்கத்தில் லியோ திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவில் நடத்தப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் அந்த உள் விளையாட்டு அரங்கத்தில் செய்யப்பட்டு வருவதாகவும் மிகப்பிரமாண்டமாக அதனுடைய மேடை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் இந்த உள்விளையாட்டு அரங்கத்தில் ஏறத்தாழ 16 ஆயிரம் பேர் அமரும் அளவிற்கு வசதி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. பலரும் தற்பொழுது ஜெய்லர் திரைப்படத்தை கொண்டாடி வந்தாலும் தளபதி ரசிகர்கள் என்றும் தளபதியை கைவிடுவதில்லை. தற்பொழுது அவர்கள் தளபதி 67 என்று இன்னும் 67 நாட்களை லியோ திரைப்படம் வெளியிடுவதற்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஹஷ்டாக்குகளை போட்டு வருகிறார்கள்.

Most Popular