தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் திரைப்படம் என்றால் அது லியோ தான். இதற்கு காரணம் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ்.
நடிகர் விஜய் வைத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக படத்தை இயக்குவது தான். இதற்கு காரணம் மாஸ்டர் திரைப்படம் கொரோனா காலகட்டத்திலேயே 250 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் நடிகர் கமலை வைத்து அவரிடத்தில் விக்ரம் திரைப்படம். 400 கோடி ரூபாய்க்கு மேல் சாதனை படைத்தது. இதனால் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஜெய்லர் படத்தின் சாதனையை முறியடித்து விட்டதாக திரைப்பட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 90 கோடி ரூபாயும், கேரளாவில் 15 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 18 கோடி ரூபாயும், ஆந்திராவில் 20 கோடி ரூபாயும், நெட்பிளிக்ஸ் 150 கோடி ரூபாய் கொடுத்தும், சன் டிவி 110 கோடி ரூபாயும், ஹிந்தியில் 25 கோடி ரூபாயும் வெளிநாட்டு உரிமம் 60 கோடி ரூபாய் இசை உரிமம் 15 கோடி ரூபாயும் என லியோ திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் ஜெயிலர் திரைப்படத்தின் வர்த்தகம் வெறும் 200 முதல் 210 கோடி ரூபாய் வரை தான் இருந்ததாகவும் மேலும் ஜெயிலர் வசூல் பெற்றதை விட லியோ கூடுதலாக வியாபாரம் ஆகி இருப்பதாகவும் திரைத்துறை வல்லுநகர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ரஜினி படம் ரிலீஸ் ஆகி செய்த சாதனையை லியோ திரைப்படம் வர்த்தகத்தில் முதலிடத்தில் விட்டதாக பலரும் கூறியுள்ளனர். எனினும் வர்த்தகம் வேறு திரையரங்கு வசூல் என்பது வேறு ஜெய்லர் 500 கோடி ரூபாயை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை லியோ முறியடிக்குமா இல்லை பின் தங்கமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.