Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாபுதிய சாதனை படைத்த லியோ..! அனைத்து ரெக்கார்ட்களும் முறியடிப்பு

புதிய சாதனை படைத்த லியோ..! அனைத்து ரெக்கார்ட்களும் முறியடிப்பு

2023 ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி விஜய் நடித்த லயோதான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக லியோ திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இது விக்ரம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா இல்லை அதை கதைக்களத்தை கொண்டதாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது.லியோ திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் இசை உரிமம் ஆகியவை பெருந்தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது. தற்போது திரையரங்கு உரிமையை யார் கைப்பற்ற போகிறார் என்ற போட்டியில் விநியோகஸ்தர்கள் மத்தியில் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கேரளாவில் லியோ திரைப்படத்தின் உரிமம் 16 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் சினிமாவின் அதிக தொகைக்கு விற்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை லியோ படைத்திருக்கிறது.

விக்ரம் திரைப்படம் கேரளாவில் 40 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் லியோ அதேபோல் ஒரு வசூலை செய்தால் மட்டுமே அங்கு லாபம் ஈட்ட முடியும். இந்த நிலையில் விஜய்க்கு வெளிநாட்டில் நல்ல மார்க்கெட் இருக்கிறது.
எனினும் அவருடைய திரைப்படங்களுக்கான வெளிநாட்டு உரிமம் தொகை அதிகபட்சமாக இதுவரை 35 கோடி ரூபாய்க்கு தான் விற்கப்பட்டிருக்கிறது.

ஆனால் லியோ திரைப்படத்திற்கு முதல்முறையாக 60 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு உரிமம் விற்கப்பட்டிருக்கிறது .இதனை phf என்ற நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதன் மூலம் அதிக தொகைக்கு வெளிநாட்டில் விற்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்று பெருமையை லியோ பெற்று இருக்கிறது.

வெளிநாட்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே லியோ விநியோகஸ்தர்களுக்கு அது லாபத்தை கொடுக்கும். இந்த கூட்டணியை நம்பி பலரும் தங்களது முதலீடு செய்திருக்கிறார்கள். இது லாபத்தை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Popular