Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ காட்சிகளை பார்த்தேன்..! பிரமிக்கும் வகையில் லோகேஸ் எடுத்திருக்காரு! - கெளதம் மேனன்

லியோ காட்சிகளை பார்த்தேன்..! பிரமிக்கும் வகையில் லோகேஸ் எடுத்திருக்காரு! – கெளதம் மேனன்

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படம் என்றால் அது லியோ தான். இது வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை எதிர்நோக்கி தான் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எனினும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸ் செய்யப்படும் என பட குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் படம் எப்படி இருக்குமோ என்னவோ என்று விஜய் ரசிகர்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கௌதம் மேனன் பேசியுள்ள வீடியோ ஒன்று விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

அதில் லியோ திரைப்படத்தின் டப்பிங் பணியின் போது தான் சில காட்சிகளை பார்த்ததாகவும் அந்த காட்சிகள் மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது என்று கௌதம் மேனன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் படத்தின் கதையும் தம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கிறது. நிச்சயமாக இந்த படம் மாபெரும் வெற்றியை பெறும் என்று கௌதம் வாசுதேவ் மேனன் கூறி இருக்கிறார். மேலும் இந்த படம் கைதி, விக்ரமின் தொடர்ச்சியாக எல்.சி.யூ இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இதற்கான பதில் இன்று தெரிந்துவிடும் என தெரிகிறது.

மேலும் எல்சி யூ வில் இடம்பெறும் கதையாக தான் லியோ இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கைதி அல்லது விக்ரம் படத்தில் நடித்த ஒரு கதாபாத்திரம் லியோ இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது.

இது எல் சியூவில் இடம்பெறும் என்று உறுதியானால் அது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் திருவிழாவாக தான் இருக்கும் என தெரிகிறது. மேலும் லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

Most Popular