Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ "நான் ரெடி" ப்ரோமாவில் ஒளிந்திருக்கும் ரோலக்ஸ் ரகசியம்

லியோ “நான் ரெடி” ப்ரோமாவில் ஒளிந்திருக்கும் ரோலக்ஸ் ரகசியம்

தமிழ் சினிமாவில் நடப்பாண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் என்றால் அது லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

- Advertisement -

இந்த படம் கைதி, விக்ரம் தொடர்ந்து வருமா இல்லை இது மாஸ்டரை போல் தனி படமா என்பது தான் தற்போது அனைத்து ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜயின் 49 வது பிறந்தநாள் வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

இதற்காக லியோ படத்தில் இருந்து நான் ரெடி என்ற பாடல் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடலின் ப்ரோமோவை தற்போது பட குழு வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்த பாடலின் நடிகர் விஜய் பாடியிருக்கும் புரோமோவில் இடம் பெற்றிருக்கும் வரிகளும் விஜயின் குரலும் ரசிகர்களை குதூகலப்படுத்தி இருக்கிறது .

- Advertisement -

இந்த ப்ரோமோ பாடல் மூன்று வரிகளை கேட்கும் போதே பாட்டு நிச்சயம் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் விஜய், சினிமா படங்களில் பாடலை பாடினால் இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் என்று திரையில் எழுத்து தோன்றும்.

அதை நினைவுபடுத்தும் விதமாக இந்த ப்ரோமோவில் இந்தப் பாடலைப் பாடியது உங்கள் விஜய் என்று வரிகள் வருகிறது. இது பழைய விஜய் ரசிகர்களை குதுகலப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த பாடலில் ஒரு வரி வருகிறது.

அதில் தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாத அப்பா என்று ஒரு வரி வருகிறது. இதில் விக்ரம், கைதி திரைப்படத்தில் தேள் வடிவம் கஞ்சா பொட்டலங்களில் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் அந்த தேன் லோகோவை தான் டேட்டுவாக அமைத்து இருப்பார்.

இதனால் ரோலக்ஸ் குழுவை எச்சரிக்கும் விதமாக இந்த பாடல் வரி அமைந்திருக்கிறது. இதன் மூலம் கண்டிப்பாக லியோ எல் சி யு வில் தான் வரும் என நம்பப்படுகிறது. இந்த பாடல் ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

வரும் 22 ஆம் தேதி இந்தப் பாடல் வெளியாவதன் மூலம் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு இருக்கிறது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular