Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஅதுக்குள்ள லியோ 2வது பாடல் தயார்.. ! ஏ.ஆர்.ரஹ்மானின் பாடகி குரலில்.. !

அதுக்குள்ள லியோ 2வது பாடல் தயார்.. ! ஏ.ஆர்.ரஹ்மானின் பாடகி குரலில்.. !

தளபதி விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது முறை கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விஜய்யுடன் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் உட்பட ஓர் நட்சிற பட்டாளமே இணைந்துள்ளது. விஜய்யின் வாரிசு பட வெளியீட்டுக்கு முன்பே தளபதி 67 ஆன லியோவுக்கு பெறும் எதிர்பார்ப்பு கூடிவிட்டது.

- Advertisement -

லியோ ஷூட்டிங்

ஜனவரி மாதம் லியோ படத்திற்கான ஷூட்டிங்கை துவங்கி அனிருத்தின் தீயான இசையில் புரோமோவையும் படக்குழு வெளியிட்டது. பின்னர் ஒரு மாதம் கேஷ்மிரில் முதல் அட்டவணையை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியது. சென்னை, ஊட்டி மற்றும் ஹைதராபாத்தில் மீதம் இருக்கும் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. இன்னும் 20 – 25 நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பும் முடியவுள்ளது.

லியோ ஃபர்ஸ்ட் லுக் & முதல் பாடல்

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய்யின் அனைத்து பிறந்தநாளுக்கும் அவரது திரைப்படம் குறித்த அப்டேட் தவறாமல் வந்துவிடும். இந்த ஆண்டும் அத போலவே நடந்துள்ளது. லியோ படக்குழு முதலில் பாடலை மட்டுமே அறிவித்து பிறந்தநாள் இரவு 12 மணிக்கு இரத்தம் தெறிக்கும் தரமான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.

- Advertisement -

மாலை 6 மணிக்கு விஜய் மற்றும் அசல் கோளாறு பாடிய ‘ நா ரெடி ’ பாடல் வெளியாகி சூப்பரான வரவேற்பையும் பெற்றது. அனிருத்தின் இசை என்றாலே மினிமம் கியாரண்டி என்றான காலம் இது ! வெளியான பாடல் வீடியோவில் தளபதி விஜய்யின் புகைப்படங்கள் மிரட்டிவிட்டன.

- Advertisement -

லியோ படத்தின் அடுத்தப் பாடல்

தற்போது லியோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படாலை அனிருத் மற்றும் சக்திஶ்ரீ கோபாலன் – அனிருத் இணைந்து பாடியுள்ளனராம். அண்மையில் சக்திஶ்ரீ கோபாலன் பாடிய அக நக, நெஞ்சமே ஆகிய மென்மையான பாடல்கள் சூபார் ஹிட் ஆகின.

அதனால் ரசிகர்கள் அடுத்தப் பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கின்றனர். ஷூட்டிங் நிறைவான பின் ஆகஸ்ட் மாதம் இப்படல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular