தமிழ் சினிமாவில் தற்போது பெரிய திரைப்படங்களுக்கு தான் திரையரங்குகள் முக்கியத்துவம் தருவதாகவும் சிறிய படங்களை மதிப்பது இல்லை என்றும் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தற்போது லியோ திரைப்படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது தீபாவளி வரை வேறு எந்த சிறிய படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில்லை .
அப்படி திரையரங்குகள் கிடைத்தாலும் மக்களுக்கு டிக்கெட்டுகள் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லைசன்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள பதிவு, சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பதிவில், நேற்று காலை மதுரவாயல் Ags Cinemas விற்கு நானும் #லைசென்ஸ் பட இணை இயக்குனரும் போயிருந்தோம்.
கவுண்டரில் போய் லைசென்ஸ் படம் டிக்கெட் கேட்டோம். ஷோ இல்லை #லியோ தான் இருக்கு என்றார் கவுண்டர் உள்ளே இருந்த பெண்மணி.ஏன் என்னாச்சு ஷோ இல்லை என்று கேட்டதற்கு?.. ஒரு ஷோ ரன் ஆவதற்கு தேவையான டிக்கெட் புக் ஆனால் தான் ரன் ஆகும்.
இதுவரை புக் ஆகலை, ஷோ டைம் வரை பார்ப்போம் புக் ஆனால் ஷோ போடுவோம் இல்லை என்றால் கேன்சல் தான் என்றார்.எங்களுக்கு மூன்று டிக்கெட் தேவை இருந்தது. ஆனால் ஷோ வுக்கு தேவையான டிக்கெட் புக் ஆகவில்லை என்றால் ஷோ கேன்சல் ஆகும்.
இப்போ என்ன செய்யலாம்… என்ற யோசனையில் இருவரும் ஆளுக்கொரு பக்கம் நின்று மொபைல் நோண்டிக் கொண்டு இருக்கையில் எங்களை கடந்து நான்கு இளைஞர்கள் டிக்கெட் கவுண்டர் போயிட்டு திரும்ப வெளியே சென்றனர்.
அவர்கள் வெளியே செல்லும்போது இணை இயக்குநர் என் அருகில் வந்து அந்த பசங்க #லைசென்ஸ் டிக்கெட் கேட்டாங்க, இவுங்க இல்லையினு சொன்னதும் போயிட்டாங்க என்றார்.
அவரிடம் மீண்டும் ஒரு முறை கேட்டு உறுதி செய்துகொண்டு வெளியே சென்று அந்த பசங்களிடம் விசாரித்தேன்… அவர்கள் எங்கள் படத்திற்கு தான் டிக்கெட் கேட்டிருக்கிறார்கள்.அவர்களை வாங்க என்று மீண்டும் உள்ளே அழைத்து வந்து… கவுண்டரில் போய் விசாரித்தேன்.
அதற்கு அந்த பெண்மணி அவர்கள் 90 ரூபாய் டிக்கெட் கேட்கிறார்கள். அது ஓப்பன் ஆகவில்லை என்றார்.
எப்போது ஓப்பன் ஆகும் என்பதற்கு கடைசிவரை அந்த அம்மா பதில் சொல்லவே இல்லை.
அந்த நாலு பசங்க மட்டும் இல்லை பின்னாடி பத்து பசங்க வருவதாக அவர்கள் சொன்னார்கள் ஆக… ஷோ ரன் பண்ண தேவை 190 ரூபாய் டிக்கெட் பத்து. அதன் மொத்த விலை 1900
இப்போ எங்களுக்கு தேவையான டிக்கெட் மூன்று 190 ரூபாய் டிக்கெட் அதன் மொத்த விலை 570 ரூபாய்.
அந்த பசங்களுக்கு தேவையானது பதினான்கு 90 ரூபாய் டிக்கெட் அதன் மொத்த விலை 1260 ரூபாய் .
மொத்தம் 1830 ரூபாய்
இவர்கள் ஷோ விற்கு தேவையானது 1900
அதிரடியாய் ஒரு முடிவெடுத்து 190 ரூபாய் பத்து எடுத்தோம். அந்த பசங்க கையில் கொடுத்து எங்க ஆட்கள் 3 பேர் வருவார்கள். மீதி 7 டிக்கெட்டை நீங்க பயன்படுத்தி கொள்ளுங்கள். மத்த 7 பேருக்கும் இதே 190 ரூபாய் டிக்கெட் எடுத்து கொடுத்து கூட்டிட்டு போங்கள் என்று சொன்னோம்.
நாம தான் விளம்பரமே பண்ணலையே அப்புறம் எப்படி இந்த பசங்க இந்த படத்தை தேடி வந்தாங்க என்ற ஆச்சரியத்தோடு இணை இயக்குனர் விசாரித்ததில்… அந்த பசங்க ட்ரெய்லரை பார்த்து படம் பிடித்து போய் புக் மை ஷோ வில் ஷோ இருப்பதை உறுதி செய்து கொண்டு தான் தியேட்டருக்கு வந்திருக்காங்க
ஏதோ சாதனை புரிந்த மகிழ்ச்சியில் வெளியே வந்து பார்க்கிங் அருகில் மழைக்கு ஒதுக்கி நின்று கொண்டிருந்தோம்.அப்போது இருவர் மழையில் நனைந்தபடியே தியேட்டர் வளாகத்தின் உள்ளே வந்து பார்க்கிங் டிக்கெட் கொடுக்கும் ஊழியரிடம் #லைசென்ஸ் படத்தை பற்றி விசாரிக்கஉள்ளே நடந்தது எதுவுமே தெரியாமல் கவுண்டரில் இருந்த பெண்மணி மாதிரியே அந்த படம் இல்லை என்று சொன்னார் எங்கள் எதிரிலேயே
இந்த பதிவு மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால்எந்த விளம்பரமுமே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
இந்த மாதிரி சின்ன படங்களை தேடி தியேட்டருக்கு வருபவர்களிடம்
தியேட்டர் அதிபர்களும், தியேட்டர் ஊழியர்களும் கொஞ்சம் மனசாட்சியோடு நடந்துகொள்ளுங்கள்.
படத்திற்கு டிக்கெட் கேட்டு வருபவர்களிடம் ஷோ ரன் ஆக தேவையான டிக்கெட் புக் ஆகவில்லை என்றால்… அதையே அவர்களிடம் சொல்லி ஷோ டைம் வரை வெயிட் பண்ண சொல்லவும்
உங்களுக்கு தேவையான டிக்கெட் புக் ஆகவில்லை என்றால் அப்போது சொல்லுங்கள் ஷோ கேன்சல் என்று.
இந்த தியேட்டரில் இதுவரை நான் படம் பார்த்தது இல்லை. அப்படி இந்த தியேட்டரில் என்ன இருக்குனு 190 ரூபாய்க்கு டிக்கெட் விக்குறாய்ங்க
ஏன்னா எங்க படத்திற்கு
Palazzo வில் 165 ரூபாய்க்கும் Inox ல் 150 ரூபாய்க்கும் டிக்கெட் எடுத்து தான் படம் பார்த்தோம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.