Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாபுறிஞ்போச்சு.. அப்போ அது தான.. விக்ரம் பட ஸ்டைலில் அப்டேட் வழங்கியுள்ள லோகேஷ் - அனிருத்.....

புறிஞ்போச்சு.. அப்போ அது தான.. விக்ரம் பட ஸ்டைலில் அப்டேட் வழங்கியுள்ள லோகேஷ் – அனிருத்.. !

கோலிவுட்டின் புகழ் உச்சத்தில் இருக்கும் விஜய்யின் அடுதப்படமான லியோ இன்னும் 4 நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது. லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்து செய்துள்ள இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் வகையில் தயாராகியுள்ளது. எப்போதும் காணாத விஜய்யை இதில் பார்ப்பீர்கள் என இயக்குனரும் கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

- Advertisement -

பெரும்பாலான அனைத்து திரையரங்கிலும் டிக்கெட் விற்பனைகள் துவங்கி சில நிமிடங்களிலேயே ஹவுஸ்புல் ஆகிவிட்டது. படத்தின் எதிர்பார்ப்பு அதிகமென்பதால் இன்னுமே பலருக்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காமல் இருக்கிறது. சில விஜய் ரசிகர்கள் காலை 4 மணிக்கே பார்க்க வேண்டும் எனும் வேகத்தில் கேரளா சென்று பார்க்க திட்டமிட்டு டிக்கெட்டும் வாங்கியுள்ளனர்.

இந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கும் படத்தில் எல்லாம் சரியாக போனால் நிச்சயம் விக்ரம், ஜெயிலர் பாக்சாபீஸை நொறுக்கிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே வெளிநாடு முன்பதிவுகளில் பல்வேறு சாதனைகள் படைத்து லீடிங்கில் உள்ளது. இந்தியாவிலும் அதே கதை தான் தொடர்கிறது.

- Advertisement -

இதற்கு மத்தியில் ரசிகர்களுக்கு இனிப்பு ஊட்டும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஓர் சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். விக்ரம் படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்றப் பின் கமல்ஹாசன் பெயரா கொண்ட ஸ்க்ரீன் முன் இருவரும் கைகோர்த்து முன்னரே வெற்றியைக் கொண்டாடுவது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.

- Advertisement -

அதே போல் தற்போது லியோவுக்கும் விஜய்யின் காமிக்கல் முகம் கொண்ட ஸ்கிரீனுக்கு முன் அதே பாணியில் ஓர் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளனர். இது லியோ படத்தின் வெற்றிக்கான அறிகுறி. மேலும் ரசிகர்கள் சிலர் இந்த போட்டோவை வைத்துத் கூட ஓர் தியரியை வகுத்துள்ளனர். அதாவது புகைப்படத்தில் இருக்கும் விஜய் காமிக்கல் போட்டோவாக இருப்பதால் அது எல்.சி.யூ டைட்டில் கார்ட்டாக இருக்கும் என கூறி வருகின்றனர். இந்த எல்.சி.யூ குழப்பம் இன்னும் தொடர்கிறது. 19ஆம் தேதி எல்லாம் தெரிந்துவிடும்.

Most Popular