Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாகைதி படம் மாதிரி இருக்கும்.. ! லியோ மற்றும் தன் அடுத்தப் படம் குறித்து அப்டேட்களை...

கைதி படம் மாதிரி இருக்கும்.. ! லியோ மற்றும் தன் அடுத்தப் படம் குறித்து அப்டேட்களை அள்ளி வீசிய லோகேஷ் கனகராஜ்.. !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறை இணைந்துள்ளார் விஜய். இந்த காம்போவில் உருவாகிக் கொண்டிருந்த லியோ திரைப்படம் படப்பிடிப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது. மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தைப் பற்றி சூடான அப்டேட்களை வழங்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

இன்று எஸ்.எஸ்.என் காலேஜ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் மேடையிலும் செய்தியாளர்களிடமும் தேவையான அறிவிப்புகளை கொடுத்துள்ளார். அதில் லியோ படத்தைப் பற்றியும் தன் அடுத்தப் படத்தின் குறிப்பும் உள்ளடங்கியுள்ளது.

லியோ படக்குழு அவ்வப்போது ரசிகர்களுக்கு அப்டேட்களை வழங்குகிறது. அண்மையில் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் போஸ்டர் மற்றும் நாங்க ரெடி பாடலை வெளியிட்டது. எதிர்பார்த்ததைப் போலவே படம் சூப்பர் ஹிட். இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் அடுத்தப் பாடல் எப்போது என ரசிகர்கள் லோகேஷிடம் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

கைதி மாதிரியான படம்

இரண்டாவது பாடல் குறித்து லோகேஷ் கனகராஜ் சிரித்துக் கொண்டே கூறியதாவது, “ லியோ அப்படியான படம் இல்லை. இது கைதி மாதிரியான ஓர் திரைப்படம். அதற்கு இன்னும் நிறைய நேரம் எடுக்கும் என நினைக்கிறேன் ” என்றார். கைதி படத்தில் பாடலே இல்லாமல் படம் இறுதிவரை விறுவிறுப்பாக போகும். அப்படியான படத்தில் விஜய்யைப் பார்க்கவே அவரது ரசிகர்கள் துடிக்கின்றனர்.

- Advertisement -

தற்போது லோகேஷ் கனகராஜின் இந்த வார்த்தைகள் அவர்களை உற்சாகத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் சொன்னது போலவே இது 100% அவரது படம் தான். ஆனால் இன்னும் இப்படம் எல்.சி.யூவில் அடங்குகிறதா இல்லையா என்பதைப் பற்றி எதுவும் கூறவில்லை.

த்ரிஷா குறித்து லோகேஷ் கனகராஜ்

பொதுவாக இதுவரை வந்த அனைத்து லோகேஷ் படத்திலும் ஹீரோயின் இறுதியில் இறந்து போவது போலவே கதை அமைகிறது. 18 ஆண்டுகள் கழித்து விஜய் – திரிஷா காம்போபை காணும் ரசிகர்கள் தலைவிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பாத்துக்கோங்க என நகைச்சுவையாக கேட்டுள்ளனர். அதற்கு லோகேஷ், “ கண்டிப்பா இந்தப் படத்தில் எதுவும் ஆகாது ” என உறுதியளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் அடுத்தப் படம்

லியோ படத்தின் ஷூட்டிங் காட்சிகள் நிறைவுப் பெற்ற நிலையில் விரைவில் படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் குதிக்கபுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறாமல் தம் அடுத்தப் படத்தின் பணிகளை லோகேஷ் ஏற்கனவே துவங்கிவிட்டார். இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம், “ கமலைத் தொடர்ந்து ரஜினியை நீங்க இயக்கப் போறதாக சொல்றாங்க. இது பற்றி நீங்க என்ன சொல்றீங்க ? ” கேட்டனர்.

உடனே லோகேஷ் வழக்கம் போல “ அதுப் பற்றிய அதிகாரபூர்க அறிவிப்பு தயாரிப்பு நிறுவனமத்திடம் இருந்து வரும். நான் எதுவும் சொல்ல முடியாது அல்லவா. ” எனக் கூறினார். அவரின் இந்த பேச்சிலேயே இது அதிகாரபூர்வமாக உறுதியாகிவிட்டது. இதே போல் தான் அவர் லியோவிற்கும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் 171 படத்திற்குப் பின் கைதி 2, விக்ரம் 2 என எல்.சி.யூவில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

Most Popular