Sunday, May 19, 2024
- Advertisement -
HomeEntertainmentசூப்பர் ஸ்டாருடன் அடுத்த ஆண்டு சூட்டிங் செல்லும் லோகேஷ் கனகராஜ்… ரஜினியை எல்சியுவில் இணைக்கவும் திட்டமாம்…...

சூப்பர் ஸ்டாருடன் அடுத்த ஆண்டு சூட்டிங் செல்லும் லோகேஷ் கனகராஜ்… ரஜினியை எல்சியுவில் இணைக்கவும் திட்டமாம்… இதோட போதும் சாமி ஹவுஸ் புல்லு

ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அடுத்தடுத்த படங்களில் பிஸியான தலைவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதையடுத்து அவர் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். இதனை அடுத்து ரஜினியின் 170 வது படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

ஜெய்பீமை போன்றே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் எடுக்கிறாராம் ஞானவேல். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி. அவர் ஒரு இஸ்லாமியராக நடிக்கிறாராம். போலீசார் நடத்தும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் நபராக நடிக்கிறாராம். காவல் துறையில் நடக்கும் அத்துமீறல்களை திரையில் காட்டப் போகிறாராம் ஞானவேல்.

- Advertisement -

மாலத்தீவில் ஓய்வில் இருக்கும் ரஜினி

தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் படத்தின் பணிகளை முடித்துவிட்டு ரஜினிகாந்த் ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் ரஜினிகாந்த் ஓய்வு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. கொஞ்ச காலம் அங்கு இருந்துவிட்டு அதன்பிறகு அவர் ஞானவேல் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

சூப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ்

விஜய்யின் ’லியோ’ படத்தை முடித்தவுடன் அவர் ரஜினியின் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற என்கவுண்டரை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம்.

Lokesh Kanagaraj

அதே சமயம் ரஜினியை எல் சி யு வில் இணைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Most Popular