Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ 2 குறித்து கோலேஷ் தந்த அப்டேட்.. அப்போ விஜய் நடிப்பாரா? ரசிகர்கள் மகிழ்ச்சி

லியோ 2 குறித்து கோலேஷ் தந்த அப்டேட்.. அப்போ விஜய் நடிப்பாரா? ரசிகர்கள் மகிழ்ச்சி

மாநகரம் ,கைதி ,மாஸ்டர் ,விக்ரம், லியோ என்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் ஒரே பாணியில் இருப்பதால் இவருடைய திரைப்படங்களை எல். சி .யூ என்று குறிப்பிடுவார்கள்.

- Advertisement -

இயக்குனர் லொகேஷன் கனகராஜ் இயக்கி தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த ஆண்டு 600 கோடிக்கு மேல் வசூலை பெற்றது . ஆனால் இந்த திரைப்படத்தின் முதல் பாதிக்கு நல்ல வரவேற்பும்  ,இரண்டாம் பாகத்திற்கு விமர்சனங்களும் பெற்றது.

ஆனால் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வம் இருப்பது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை அவர்கள் எதிர்பார்ப்பதில் இருந்து தெரிய வருகிறது. தளபதி விஜய் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தது தமிழ் சினிமாவையே பரபரப்பில் ஆழ்த்தியது. அதேபோல் தளபதி விஜய்யின் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 69 திரைப்படத்தை நடித்த பிறகு முழுமூச்சாக அரசியலில் இறங்கப் போவதாக தளபதி விஜய் அறிவித்திருக்கிறார் . மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க லோகேஷ் கனகராஜிடம் லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தலைவர் 171 படத்தின் முன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இதற்குப் பிறகு கைதி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தையும் , விக்ரம் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்க இருக்கிறார் .இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இவரிடம் தளபதி விஜய் அரசியலில் இறங்கி இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு தளபதி விஜய் ஒத்துக்கொண்டால் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இது தளபதி ரசிகர்களிடமம் மகிழ்ச்சியையும் , கேள்வியையும் ஏற்படுத்தி இருக்கிறது லோகேஷ் கனகராஜுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும் தளபதி விஜய் இதற்கு ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

Most Popular