Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஇந்தி பட உலகிற்கு செல்லும் லோகேஷ் கனகராஜ்… அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று கதாநாயகர்கள் சப்ஜெக்டாம்…...

இந்தி பட உலகிற்கு செல்லும் லோகேஷ் கனகராஜ்… அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று கதாநாயகர்கள் சப்ஜெக்டாம்… அதுவும் எந்தெந்த ஹீரோக்கள் தெரியுமா?

2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் வங்கி ஊழியராக பணிபுரிந்து, பின்னர் அந்த வேலை பிடிக்காமல் சினிமாவை நோக்கிய கனவுடன் சென்னைக்கு பயணம் செய்தார்.

- Advertisement -

தொடக்கத்தில் குறும்படங்களை இயக்கி வந்த அவருக்கு, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த அவியல் ஆந்தாலாஜி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது. இங்கிருந்து தனது பயணத்தை தொடங்கிய லோகேஷ், அடுத்ததாக மாநகரம் எனும் திரைப்படத்தை குறித்து அசர வைத்தார்.

நான்கு கதாபாத்திரங்களை சுற்றி வரும் கதை, அதை அனைத்தையும் ஒரே இரவில் காட்டுவது என தனக்கு ஏற்றார் போல் திரைக்கதையை சுவாரசியப்படுத்தி சபாஷ் போட வைத்தார். இவரது இரண்டாம் திரைப்படமான கைதியின் ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டம் உள்ளதாய் இருக்க, படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இப்படி இரண்டே படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வெளியான மாஸ்டர் திரைப்படம், சுமாரான விமர்சனத்தை பெற்றாலும் கலெக்ஷனில் கல்லா கட்டியது. இதன் பிறகு, கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை அவர் இயக்கினார்.

- Advertisement -

பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதுவும் கிளைமாக்ஸில் சூர்யா வந்த காட்சிக்கு திரையரங்குகளில் சரியான வரவேற்பு கிடைக்க, திரைப்படத்தை பலரும் பாராட்டினர். கைதி படத்தை அவர் விக்ரமுடன் முடிச்சு போட்டு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்னும் எல் சி யு கான்செப்ட் அறிமுகம் செய்தார்.

இது பலருக்கும் பிடித்துப் போனதால் அவரின் அடுத்த படமான லியோவிலும் இது தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது.

இதனிடையே இயக்கம் மட்டும் இல்லாமல் தயாரிப்பிலும் லோகேஷ் கனகராஜ் கவனம் செலுத்தி இருக்கிறார். தனது நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் அடுத்த படத்தை லோகேஷ் தான் தயாரிக்கிறார். ஹாரர் ஜானரியில் உருவாகும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியிலும் ஒரு படத்தை தயாரிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். மூன்று ஹீரோக்கள் கொண்ட இந்த சப்ஜெக்ட்டில், தமிழ் தெலுங்கு ஹிந்தியில் இருந்து மூன்று முன்னணி ஹீரோக்கள் நடிக்க உள்ளார்களாம். இந்தத் தகவலால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள், இதன் அடுத்த கட்ட நகர்வு குறித்து காத்திருக்கின்றனர்.

Most Popular