Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாதேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் லோகேஷ்.. ! தெலுங்கு ஃப்ளாப் ஸ்டாருடன் அடுத்த படம்

தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் லோகேஷ்.. ! தெலுங்கு ஃப்ளாப் ஸ்டாருடன் அடுத்த படம்

மிகவும் தேவைப்பட்ட இயக்குனர்களில் ஒருவராக அண்மையில் லோகேஷ் கனகராஜ் திகழ்கிறார். கைதி படத்தை வைத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்லீ – விஜய்யின் பிகில் படத்தையே முறியடித்து மக்கள் மத்தியில் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் லோகேஷ் கனகராஜ். உடனே விஜய்யை வைத்து மாஸ்டர் அதன் பின் தன் ஆசான் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யாவை வைத்து ‘ விக்ரம் ’ படங்களைக் கொடுத்தார்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் சினினாட்டிக் யுனிவர்ஸ்

விக்ரம் படத்தின் இறுதிக் காட்சியில் ரோலக்ஸ், கைதியில் வரும் தில்லி ஆகியோர்களை விக்ரம் படத்துடன் இணைத்து தன் தனி யுனிவர்ஸை உருவாக்கினார் லோகேஷ். தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை இன்னும் 30 நாட்களுக்குள் நிறைவு செய்த போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் குதிக்கவிருக்கிறார். படம் ஆயுத பூஜைக்கு உலகெங்கும் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜின் அடுத்தத் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை வெளியிட்ட பின் அவரது அடுத்தப் படம் எப்போது ? யாருடன் ? என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுப்பப்பட்டன. மகேஷ் பாபுவை அவர் அடுத்து இயக்கவிருக்கிறார் என்ற செய்தி வைரலகியது. அதனை லோகேஷ் நேர்காணல் ஒன்றில் நிராகரித்துவிட்டார். இரண்டே மாதங்களில் விஜய்யுடன் மீண்டும் இணையும் செய்தியை அவரே கூறியும் விட்டார்.

- Advertisement -

தற்போது விஜய்யுடன் செய்யும் லியோ படம் விரைவில் நிறைவு பெரும் நிலையில் லோகேஷ் அடுத்தப் படத்தைப் பற்றி மீண்டும் பேச ஆரம்பித்துள்ளனர். இப்போது வரை கிடைத்துள்ள செய்திகளின் படி தெலுங்கு ஸ்டார் பிரபாஸ் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காணப்படுவார்.

- Advertisement -

பிரபாஸின் ஃப்ளாப் ஸ்ட்ரீக்

பாகுபலி படத்திற்குப் பின் சாஹோ, ரதே ஷ்யாம், ஆதிபுருஷ் என அடுத்தடுத்து மூன்று அட்டர் ஃப்ளாப் படங்களை கொடுத்துள்ளார். மூன்று படங்களுமே நல்ல எதிர்பார்ப்புகளையும் கொண்டது என்பதால் வெளியீட்டுக்குப் பின் நெட்டிசென்கள் கலாய்த்துத் தள்ளினர். பிரபாஸை சமூக வலைதளங்களில் ஃப்ளாப் ஸ்டாராக கேலியும் செய்கின்றனர்.

ராசியில்லாத நடிகருடன் இணைந்த லோகேஷ் பெரிய ரிஸ்க் எடுக்கிறார் என சில தமிழ் சினிமா ரசிகர்கள் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் – பிரபாஸ் கூட்டணி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லியோ படமும் எல்.சி.யூ என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மீண்டும் ஒரு பெரிய ஸ்டாரை யுனிவர்ஸில் சேர்ப்பது சற்று சாத்தியமில்லாத ஒன்று.

பிராபாஸை மீட்ட இரு பெரிய இயக்குனர்கள்

அடுத்து கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். இப்படம் அவரின் ஃப்ளாப் ஸ்ட்ரீக்கில் இருந்து மீட்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் பின் லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் அடுத்தடுத்து கியாரண்டியாக இரு நல்ல படங்கள் எனும் மனத் திருப்தியில் உள்ளனர்.

Most Popular