Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ 2 வை கன்ஃபார்ம் செய்த லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்

லியோ 2 வை கன்ஃபார்ம் செய்த லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்

லியோ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்பொழுது தளபதி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்று மகிழ்ச்சியாக இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஒரு படி சந்தோஷத்தை அள்ளி தெளித்து இருக்கிறார் லியோ திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்யிடம் லியோ திரைப்படத்தில் இரண்டாவது பாகத்தை எப்பொழுது இயக்கப் போகிறீர்கள் என்று பார்வையாளர் ஒருவர் கேட்டார் .அதற்கு அவர் தெரியவில்லை தற்பொழுது நான் ரஜினி சாரினுடைய திரைப்படம் பிறகு கைதியின் இரண்டாவது பாகம் என இந்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன் .

இதற்கெல்லாம் முடிந்த பிறகுதான் லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் கதையை எழுத வேண்டும் என்று கூறியிருந்தார் .மேலும் விஜய் அண்ணா திரைப்படம் தானே அவருடன் பணியாற்றுவது ஜாலியாக இருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் இயக்கலாம் என்று உரிமையுடன் கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

தளபதி ரசிகர்களிடம் லியோ திரைப்படத்தில் இரண்டாவது பாகம் வருமா வராதா என்று கேள்வி குறி இருந்து வந்தது .அது தற்பொழுது லோகேஷ் கனகராஜ் கூறிய பதிலில் தெளிவானது. இதனால் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். கண்டிப்பாக லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரப்போகிறது என்பது உறுதி செய்து விட்டார்கள்.

- Advertisement -

Lcu( லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) என்று லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களை குறிப்பிடுகிறார்கள். இதில் கைதி, விக்ரம் போன்ற திரைப்படங்கள் இடம் பெற்று இருக்கிறது. இந்த பட்டியலில் தற்பொழுது லியோ திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை இந்த ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை பெற்று முதல் இடத்தில் இருப்பது லியோ திரைப்படம் தான்.

அதனால் எந்த அச்சமும் இன்றி தளபதி விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவார் என்பது அவர் கூறிய பதிலின் மூலம் கன்பார்ம் செய்யப்பட்டுள்ளது.

2019 இல் வெளி வந்த கைதி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தயே லோகேஷ் கனகராஜ் இனிதான் இயக்க இருப்பதாக கூறி இருக்கிறார் .இதனால் தற்பொழுது வெளி வந்திருக்கும் லியோ திரைப்படத்தை இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து தான் இயக்குவார் என்பது ரசிகர்கள் மத்தியில் உள்ள கருத்தாக இருக்கிறது.

Most Popular