Monday, June 17, 2024
- Advertisement -
Homeசினிமாலவ் டூடே படத்தின் 100வது நாள்.. எந்த தியேட்டரில் தெரியுமா? சாதித்து காட்டிய பிரதீப்

லவ் டூடே படத்தின் 100வது நாள்.. எந்த தியேட்டரில் தெரியுமா? சாதித்து காட்டிய பிரதீப்

- Advertisement -

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் முன்னணி நடிகர்களுடைய திரைப்படம் அல்லது ஒரு நல்ல கதைக்களத்தை கொண்ட திரைப்படம் என்றால் 100 மற்றும் 100க்கும் மேற்பட்ட நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.ஆனால் இது எல்லாம் ஓடிடி என்ற ஒன்று இல்லாத போது தான் சாத்தியமானது. தற்பொழுது எல்லாம் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தால் ஒரு மாத காலத்திலேயே அது ஓடிடி என்ற இணையதளத்தில் பதிவிடப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் அதை வீட்டில் இருந்தபடியே பார்த்து ரசித்து வருகிறார்கள். இதனால் 100 நாள் என்பது எட்டாதூரம் ஆகி வருகிறது.
ஆனால் அதிலும் 100 நாள் ஒரு திரைப்படம் ஓடினால் அது நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது என்று தான் பொருளாகும். அந்த வகையில் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே என்ற திரைப்படம் வெற்றியடைந்து வருகிறது.கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியானது லவ் டுடே திரைப்படம்.

- Advertisement -

இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் காதலர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதை எதார்த்தமான முறையில் காட்டி இருந்தார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அதேபோல் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் இவர் நம்மில் ஒருவர் என்று தோன்றும் அளவிற்கு எதார்த்தமாக இருந்தது.

- Advertisement -

இதன் மூலம் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் வெற்றி அடைந்தது என்பதைக் குறிப்பிடும் வகையில் வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கிலும் அண்ணா நகரில் உள்ள பி வி ஆர் அரங்கிலும் லவ் டுடே திரைப்படம் இன்று நூறாவது நாளாக திரையிடப்பட்டு வருகிறது.

மேலும் இந்தத் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி netflix என்ற ஓ டி டி யில் வெளியிடப்பட்டது அந்த நிலையிலும் இந்த திரைப்படம் 100 நாட்கள் ஓடி இருப்பது பெரிய சாதனை ஆகும்.இதே போல் இவர் முதலில் இயக்கிய நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படமும் 100 நாட்கள் திரையரங்கில் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Most Popular