Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாமாமன்னன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..விவரம் இதோ

மாமன்னன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..விவரம் இதோ

கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது மாமன்னன் திரைப்படம். தற்பொழுது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி படம் தான் இந்த மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

சினிமாவை விட்டு விலகப் போகும் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்கும் கடைசி திரைப்படத்தை சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற முடிவில் தான் இந்த கதையை தேர்ந்தெடுத்திருந்தார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது .அது வெளியிடப்பட்ட பிறகும் மொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இதுவரை மாமன்னன் திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.இந்தத் திரைப்படத்தின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக நகைச்சுவை நடிகர் வடிவேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த கதாபாத்திரத்திற்கும் அவருடைய நடிப்பிற்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல் பகத் பாஸில் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடித்த பொழுதே அவருக்கென்று தனி ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.

இந்நிலையில் இவர் தற்பொழுது மாமன்னன் திரைப்படத்தின் உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாக நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.அந்த கதைக்கு பொருத்தமாகவும் இருந்தார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்

தற்பொழுது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஆனால் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க முடியாதவர்களுக்கு அவர்களை தேடி வருகிறது மாமன்னன் திரைப்படம். வருகின்ற 27ஆம் தேதி netflix என்ற ஓ டி டி யில் மாமன்னன் திரைப்படம் வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக இருக்கிறது.

மாமன்னன் திரைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இதுவரை பார்க்காதவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

Most Popular