Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாமாமன்னன் படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு.. போஸ்டரில் கருப்பி?

மாமன்னன் படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு.. போஸ்டரில் கருப்பி?

தமிழ் சினிமாவில் ஜூன் மாதத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது மாமன்னன் தான். இதற்குக் காரணம் இந்தப் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வித்தியாசமான அடித்தட்டு மக்களின் பிரச்சினையை எடுத்துரைத்த திரைப்படங்களை இவர் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை அவர் கொடுக்க உள்ளார்.இது அவருக்கு ஹார்ட்ரிக் வெற்றி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இது எல்லாம் விட முக்கிய காரணம் இந்த படத்தில் நடிகர் வடிவேலு வில்லனாக நடித்திருக்கிறார். வடிவேல் என்றால் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருப்போம்.

- Advertisement -

சங்கமம், தேவர் மகன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக வடிவேலுவை வில்லனாக மாறி செல்வராஜ் காட்ட இருக்கிறார். இதைப் போன்று இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார்.

- Advertisement -

பாசில் ஒரு படத்தை தேர்வு செய்கிறார் என்றால் அதன் கதை சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதேபோன்று அமைச்சரான பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் இதுதான். நான் மீண்டும் படத்தில் நடிப்பேன் என்றால் அது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் என்று கூறும் அளவுக்கு ஒரு நல்ல எதிர்பார்ப்பை மாரி செல்வராஜ் ஏற்படுத்தி இருக்கிறார்.

இதேபோன்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமிய இசையை பயன்படுத்தி பாடல்களை அமைத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை ஜூன் 16ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தேதி அறிவித்த பட குழு நேரத்தை ரிலீஸ் செய்யவில்லை. இதற்கான போஸ்டரில் உதயநிதி ஸ்டாலின் உடன் நிறைய நாய்கள் ஓடும் வகையில் ஸ்டில் அமைக்கப்பட்டிருக்கிறது.
பரியேறும் பெருமாள் கருப்பி என்ற நாய் மிகவும் பிரபலமான நிலையில் அதே போன்று இந்தப் படத்தில் ஏதேனும் மாரி செல்வராஜ் வைத்திருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Most Popular