Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentகேங்ஸ்டராக மணிகண்டன்… போலீஸாக அதர்வா… கிடாரி பட இயக்குநரின்அடுத்த தரமான படைப்பு மத்தகம்

கேங்ஸ்டராக மணிகண்டன்… போலீஸாக அதர்வா… கிடாரி பட இயக்குநரின்அடுத்த தரமான படைப்பு மத்தகம்

கிடாரி பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா – மணிகண்டன் நடித்துள்ள மத்தகம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

விக்ரம் வேதா வசனகர்த்தா மணிகண்டன்

ஆரம்பத்தில் வானொலி தொகுப்பாளராக இருந்த மணிகண்டன், தனது டப்பிங் திறமை மூலம் டிவி நிகழ்ச்சிகளில் குரல் கொடுத்தார். சினிமாவில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா எனப் போராடிய மணிகண்டனுக்கு, பீட்சா இரண்டாம் பாகம் படத்தில் எழுத்தாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர், விஜய் ஆண்டனியின் இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் மூலம் நடிக்கவும் தொடங்கினார்.

விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருக்கமான மணிகண்டன், காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் விவரம் தெரியாத முரளி கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து, விக்ரம் வேதா படத்தில் நடித்த அவர், வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். இந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்க, மணிகண்டனின் எழுத்தை பலரும் பாராட்டினர்.

- Advertisement -

ஜெய்பீம் ராசாகண்ணு

தொடர்ந்து விஸ்வாசம், தம்பி திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்த மணிகண்டன், சில்லு கருப்பட்டி திரைப்படத்தில் நடித்து பலரும் பரீட்சையமான முகமாக மாறினார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் ராசாகண்ணு எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பலரும் கலங்கடித்தார் மணிகண்டன்.

- Advertisement -

தொடர்ந்து குட் நைட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், தனது முதல் கதாநாயகன் படத்திலேயே அதிரி புதிரியான வெற்றி கண்டார். மோட்டார் மோகன் ரோலில் அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் யதார்த்தமாக அமைய, அவர்கள் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மத்தகத்தில் வில்லனான மணிகண்டன்

இந்நிலையில் கிடாரி பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் மணிகண்டன், மத்தகம் எனும் படத்தில் நடித்துள்ளார். கேஸ்டர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாகவும், அதர்வா போலீஸ் ரோலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிகிலா விமல், கவுதம் மேனன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கிரைம் கலந்த த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Most Popular