Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாமன்னன் வந்தானடி படம் என்ன ஆச்சு.. செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த படத்திற்கா இந்த நிலை

மன்னன் வந்தானடி படம் என்ன ஆச்சு.. செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த படத்திற்கா இந்த நிலை

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டார்கள். அதுவும் பெரிய இயக்குனர்கள் எல்லாம் தற்போது காமெடியர்களை வைத்து ஹீரோவாக படத்தை எடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

அப்படி வந்த திரைப்படம் தான் விடுதலை. இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. இந்த வகையில் நடிகர் சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்குனர் செல்வராகவன் எடுத்த திரைப்படம் தான் மன்னன் வந்தானடி.

ஆனால் இந்த படம் அறிவித்து இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. இது குறித்து முதல்முறையாக மௌனத்தை கலைத்துள்ள நடிகர் சந்தானம் இந்த திரைப்படம் 80 சதவீதம் பணிகள் முடிந்து விட்டதாகவும், இன்னும் 10 நாட்கள் சூட்டிங் நடைபெற்ற படத்தை முழுமையாக முடித்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் ஒரு காட்சி சரிவரவில்லை என்றால் 30 முதல் 40 டேக்குகளை எடுத்து ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியதாக கூறினார். இந்தப் படம் காமெடி கிடையாது என்றும் மிகவும் சீரியசான காதல் கதை கடந்த திரைப்படம் என்றும் குறிப்பிட்ட சந்தானம் தாம் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்ததாகவும் வேதனை தெரிவித்தார்.

- Advertisement -

இந்த படம் வெளி வருவதும் வெளி வராததும் தயாரிப்பாளர் கையில் தான் இருக்கிறது என்று குறிப்பிட்ட சந்தானம் இந்த படம் வெளி வந்தால் தன்னுடைய நடிப்புத்திறன் தெரியவரும் என்றும் கூறியுள்ளார். காமெடியார்களாக அறியப்பட்ட நடிகர்கள் எல்லாம் தற்போது சிறப்பாக நடித்து வரும் நிலையில் அந்த வரிசையில் மன்னன் வந்தானடி திரைப்படமும் வெற்றி பெறும் என ரசிகர்களும் நம்பி இருந்தனர்.

ஆனால் இந்த படம் அறிவிப்பு வெளியானதே மறக்கும் அளவிற்கு தாமதம் ஆகிவிட்டது தான் இயக்கிய திரைப்படங்கள் முடியவில்லை என்பதால் தற்போது செல்வராகவும் நடிப்பில் பிஸி ஆகிவிட்டார்.

Most Popular