Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஸ்ரீவித்யா சொன்ன உருக்கமான வார்த்தை.. சாகுவதற்கு முன்பு அந்த நடிகரை ஒரு முறை பார்க்கனும்..வைரலாகும் மனோபாலா...

ஸ்ரீவித்யா சொன்ன உருக்கமான வார்த்தை.. சாகுவதற்கு முன்பு அந்த நடிகரை ஒரு முறை பார்க்கனும்..வைரலாகும் மனோபாலா வீடியோ

தென்னிந்திய சினிமாவில் சுமார் 800 திரைப்படங்களுக்கு மேல் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஸ்ரீவித்யா. பல்வேறு படங்களில் குணச்சித்ர நடிகையாக வந்து பிரபலமடைந்தவர். அவர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதலுக்கு மரியாதை திரைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்காதவை.

- Advertisement -

இப்படி உச்சத்தில் இருந்த நடிகை ஸ்ரீவித்யா 2006 ஆம் ஆண்டு புற்றுநோயால் காலமானார். 13 வயதில் இருந்து 53 வயது வரை 40 ஆண்டுகாலம் சினிமாவில் பல கேரக்டரில் ஸ்ரீவித்யா முடித்து இருக்கிறார்.

ஸ்ரீவித்யா குறித்து அண்மையில் காலமான மனோபாலா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஸ்ரீவித்யா இறக்கும் தருவாயில் தம்மிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ளார். அதில் என்னை நீ பார்த்தால் உன் வாழ்க்கையை வெறுத்து விடுவாய்.

- Advertisement -

என்னோட சொத்துக்களை எல்லாம் இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறேன். எனக்கு அந்த நடிகரை பார்க்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது என்று கூறினார். நான் உங்களிடம் அந்த நடிகரின் பெயரை சொல்ல விரும்பவில்லை என்று அந்த வீடியோவில் மனப்பாடம் கூறி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஸ்ரீவித்யா இப்படி மனதை விட்டு பேசும்போது நான் அவருக்கு ஏன் அப்படி சொல்கிறாய். நீ எவ்வளவு பெரிய நடிகை. தமிழ்நாட்டில் உனக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் உன் கூட உன் அரசாங்கமே இருக்கிறது என்று நான் கூறினேன்.

அதற்கு தகுந்தார் போல் கேரளாவில் அவர் உயிரிழந்த உடன் அவருக்கு அம் மாநில அரசு முழு அரசு மரியாதை கொடுத்தது. தமிழ்நாட்டில் பேரும் புகழுடன் வாழ்ந்த நடிகை கேரளாவில் போய் இறக்கணுமா என்று நான் எண்ணினாலும் மாநில அரசு அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுத்தது என்று மனோபாலா கூறியுள்ளார்.

Most Popular