Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசெய்திகள்அயோத்தி, அகிலன் முதல் அவதார் வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்.. எதில் பார்க்கலாம்

அயோத்தி, அகிலன் முதல் அவதார் வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்.. எதில் பார்க்கலாம்

- Advertisement -

திரையரங்குகளை வீழ்த்தும் அளவிற்கு ஒவ்வொரு வாரமும் அதிக அளவில் ஓடிடியில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. மார்ச் மாதத்தில் தியேட்டர்களில் ரிலீசான எந்த படமும் வெற்றி பெறவில்லை. இது திரைப்பட உலகை கலக்கமடைய செய்துள்ளது.

குறிப்பாக ஜெயம் ரவி நடித்த அகிலன் திரைப்படம் படுதோல்வி தழுவியது. தேர்வு காலம் என்பதால் திரையரங்குகளுக்கு மக்கள் செல்வதை குறைத்துக் கொண்டனர். ஒடிடியில் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு மக்கள் மத்தியில் பெருகிவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் வரும்  31ஆம் தேதி போட்டியில் ஒ டி டியில் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். விமர்சன வீதியில் வெற்றி பெற்ற சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் ஜீ 5 மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று ஜெயம் ரவி நடித்த அகிலன் திரைப்படமும் மார்ச் 31ஆம் தேதி ஜீ 5 வெளிவர உள்ளது.

- Advertisement -

பிரபுதேவா பல்வேறு வித்தியாசமான தோற்றத்தில் நடித்த பகிரா திரைப்படம் சன் என் எக்ஸ் டி ஆப்பில் ரிலீஸ் ஆக உள்ளது. இதைப் போன்று அரியவான் என்ற தமிழ் படம் தென்கோட்டாவிலும், அமிகோஸ் என்ற திரைப்படம் நெட்பிளிக்சிலும், கேஸ் லைட் என்ற ஹாலிவுட் திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், மர்டர் ஹிஸ்டரி என்ற ஆங்கில திரைப்படம் நெட்பிளிக்சிலும் ரிலீசாகிறது.

இதேபோன்று உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனைகள் படைத்த அவதார் 2 திரைப்படத்தின் ஓடிடி, அமேசான் பிரைமில் 31ஆம் தேதி ரிலீசாகிறது. எனினும் இதனை காசு கொடுத்தது தான் தனியாக பார்க்க வேண்டும். இத்தனை படங்களும் ஒரே நேரத்தில் ஒடிடி வந்தால் மக்கள் எதை பார்ப்பது எதனை விடுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இதில் அயோத்தியும், அகிலன் திரைப்படமும் ஜீ5-யில் சக்கை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஹாட் ஸ்டாரின் இடம்பெற்றுள்ள எச் பி ஓ தொடர்பான அனைத்து சீரியஸ்களும் திரைப்படங்களும் வரும் 31ஆம் தேதி முதல் நீக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Popular