Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாவெள்ளத்தில் மிதந்த கிராமம்..களத்தில் ஹீரோவான மாரி செல்வராஜ்.. விமர்சனத்துக்கு பதிலடி

வெள்ளத்தில் மிதந்த கிராமம்..களத்தில் ஹீரோவான மாரி செல்வராஜ்.. விமர்சனத்துக்கு பதிலடி

பரியேறும் பெருமாள் மாமன்னன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் தற்பொழுது ஒரு ரியல் லைஃப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இவர் இயக்கம் திரைப்படங்களிலேயே இவருடைய குணத்தை பலமுறை பார்த்திருக்கிறோம் நமக்கு ஒன்று தேவை என்றால் அது நாமே போராடி எப்படி வாங்குவது என்பதைத்தான் அவர் எல்லா திரைப்படங்களிலும் மையமாக வைத்து இயக்கியிருந்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த பெரு மழையால் ஊரே வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்தது எதிர்பாராத விதமாக பெய்த மழையால் முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்பட நேரிட்டது.

- Advertisement -

இதேபோல் சென்னையிலும் கடந்த மாதம் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் எந்த நடிகனோ நடிகையோ இயக்குனரோ வெள்ளத்தில் இறங்கி யாரையும் மீட்க முயற்சி செய்யவில்லை. பதிலாக வீட்டுக்குள் இருந்து கொண்டே அரசாங்கத்தை குறை கூறி வீடியோக்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து வந்தார்கள்.

- Advertisement -

இவர்களுக்கு மத்தியில் தான் சொந்த ஊரான தூத்துக்குடியில் வசிக்கும் மக்களை இயக்குனர் மாரி செல்வராஜ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து மீட்பு பணி வீடு பட்டு பலருக்கும் உதவி செய்தார் என்பது பாராட்டிற்கு உரியது.

ஆனால் சிலரின் குறுகிய மனப்பான்மை இங்கு செயலை பாராட்டா விட்டாலும் குறை கூறாமல் இல்லை இதைக் கூட விமர்சனம் ஆகி விட்டார்கள். மாரி செல்வராஜ் ஒரு இயக்குனர் தானே உதயநிதி ஸ்டாலினுக்கு இவர் ஏன் உதவ வேண்டும்.இவர் பேச்சைக் கேட்டு உதயநிதி ஸ்டாலின் ஏன் மீட்பு பணியை செயல்படுத்த வேண்டும்.

என்றெல்லாம் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மாரி செல்வராஜ் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை நாங்கள் மீட்டு இருக்கிறோம். தூத்துக்குடி என்னுடைய ஊர்.

இந்த ஊரில் ஒரு நபராக தான் இந்த உதவிகளை நான் செய்தேன். என் ஊர் மக்களுக்கு உதவிட நான் இயக்குனராக இல்லாவிட்டாலும் களம் இறங்கி இருப்பேன் என்று விமர்சனம் செய்தவர்களுக்கு நல்ல பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

Most Popular