Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஅஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி.. உறுதி செய்த சுரேஷ் சந்திரா.. ஃபேன் பாய்...

அஜித் குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி.. உறுதி செய்த சுரேஷ் சந்திரா.. ஃபேன் பாய் சம்பவம் லோடிங்..!

திரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன், அடங்காதவன், அசராதவன், பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகியது. நல்ல விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

விஷாலின் கம்பேக் படமாகவும் அமைந்ததால் ஏராளமானோர் ஆதிக் ரவிச்சந்திரனை பாராட்டினர். அதேபோல் மார்க் ஆண்டனி திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதனால் உற்சாகமடைந்த தயாரிப்பாளர், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி அசத்தினார்.

இதனால் ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படம் எது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமாரை சந்தித்து கதை கூறியதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் குமார் படத்தை தயாரிக்க முன் வந்ததாக கூறப்பட்டது. 

- Advertisement -

இதன்பின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கதை கூறியுள்ளார். அந்த கதை அஜித் குமார் மற்றும் தயாரிப்பு தரப்புக்கு பிடித்து போக, உடனடியாக தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் அஜித் குமாரின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அஜித் குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், அவரையே இயக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அஜித் குமாரின் நீண்ட நாள் மேனேஜரான சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ளார். இதனால் விடாமுயற்சி படத்திற்கு பின் உடனடியாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular