Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாமாவீரன் வெளிவந்த முதல் விமர்சனம்..! படம் எப்படி இருக்கு

மாவீரன் வெளிவந்த முதல் விமர்சனம்..! படம் எப்படி இருக்கு

தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் தான் தொலைக்காட்சியில் இருந்து தற்போது கோலிவுடில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் கடந்த திரைப்படம் ஆன பிரின்ஸ் தோல்வியை தழுவியது. இது சிவகார்த்திகேயனுக்கு சரிவாக பார்க்கப்பட்டது. மேலும் அவருடைய டான் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்றாலும் சமூக வலைத்தளத்தில் விமர்சன ரீதியாக கடும் தோல்வியை சந்தித்தது.

இதனை அடுத்து மாவீரன் திரைப்படத்தின் முன்பதிவு படுமோசமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த ஒரு காட்சியும் ஹவுஸ்ஃபுல்லாகவில்லை. இது சிவகார்த்திகேயன் போல உள்ள பெரிய நடிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் படத்தை ஓட வைப்பதற்காக படத்தில் உள்ள முக்கியமான சீக்ரெட்டை அண்மையில் பட குழு வெளியிட்டது. சிவகார்த்திகேயன் வானத்தில் அண்ணாந்து பார்ப்பது விஜய் சேதுபதியின் குரல் தான் என்று பட குழு வெளியிட்டது.

- Advertisement -

இன்னும் அதுவும் ரசிகர்களிடையே எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் படத்தை வாங்கி வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் மாவீரன் படத்தை பார்த்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் தனது கையை உயர்த்தி தம்சப் காட்டுவது போல் ட்விட்டரில் பதிவு செய்து இருக்கிறார். இதன் மூலம் மாவீரன் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்பதை உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் எப்போதெல்லாம் ஒரு படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்களோ அந்த படம் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. அவர் எந்த படத்தை பார்த்து விட்டு நல்லா இல்லை என்று சொல்லி இருக்கிறாரோ அந்த படம் எல்லாம் சுத்தமாக ஓடியது இல்லை.

மாவீரனுக்கு சொன்னது போல் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு உதயநிதி விமர்சனம் சொல்லியிருந்தார். அதெல்லாம் மெகா ஹிட் ஆனது. இதுபோல் மாவீரனும் வசூலில் சாதனை படைக்கும் என கோலிவுட் எதிர்பார்க்கிறது.படத்தின் முதல் விமர்சனம் வெளியான பிறகு படத்திற்கான கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular