சினிமா

5 மொழியில் மிரட்ட வரும் மைக்கேல்..! விஜய் சேதுபதிக்கு முக்கிய ரோல்

தமிழில் வெளிவந்த புரியாத புதிர் இஸ்பேட்டா ராஜாவும் இதய ராணியும் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்பொழுது மைக்கேல் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் சுதிப் கிசான் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராவார்.

ஆனால் இவர் தமிழில் யாருடா மகேஷ் மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் கசடதபற போன்ற சில படங்கள் தான் நடித்திருக்கிறார். அதனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவருக்கு ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் தற்போது இது மாற உள்ளது.

இதற்கு முன்பு இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய படங்கள் எல்லாம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது அதிலும் புரியாத புதிர் என்ற திரைப்படம் விஜய் சேதுபதியின் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்போது சுதீப் , ரஞ்சித் இணைந்து மைக்கேல் என்ற படத்தில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவர்களோடு இணைந்து வரலட்சுமி ,திவ்யன் ஷா கவுசிக் மற்றும் ஒரு பிரபல இயக்குனரும் நடிகரும் கௌதம் வாசுதேவ் மேனனும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார்.இவர் இதற்கு முன்பு இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய புரியாத புதிர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படங்களுக்கு  இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் சந்திப் கிஷான் நடித்த கசடதபற என்ற திரைப்படத்திற்கும் ஷாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஆனால் இந்த திரைப்படங்களில் வரும் பாடல்கள் ஒன்றும் பெரிய அளவில் புகழ் பெறவில்லை. ரசிகர்கள் மத்தியில் சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் உடைய டீசர் வெளியாகி இருந்தது .அதை பார்ப்பதற்கு இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் திரில்லர் ஃபிலிம் போன்று தோன்றுகிறது. ஒருவேளை இந்த திரைப்படம் இவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்பை பெறலாம் .
இந்தத் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 3 தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.இந்தப் படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி என 5 மொழிகளில் வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top