Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஇத்தனை ஆயிரம் டிக்கெட்டுகளா.. முன்பதிவில் மிரட்டும் மார்க் ஆண்டனி.. விஷாலுக்கு சரியான கம்பேக் தான் போல.....

இத்தனை ஆயிரம் டிக்கெட்டுகளா.. முன்பதிவில் மிரட்டும் மார்க் ஆண்டனி.. விஷாலுக்கு சரியான கம்பேக் தான் போல.. படம் மட்டும் நல்லாயிந்தா!

த்ரிஷா இல்லனா நயன்தாரா, பஹீரா, அன்பானவன், அடங்கதாவன், அசராவதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அடுத்ததாக விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், சுனில் ஆகியோர் நடிப்பில் மார்க் ஆண்டனி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது.

- Advertisement -

டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம், கேங்ஸ்டர் காமெடி படமாக உருவாகியுள்ளது. விஷாலும், எஸ்ஜே சூர்யாவும் பல்வேறு கெட்டப்களில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியாகிய மார்க் ஆண்டனி ட்ரெய்லரில், எஸ்ஜே சூர்யா பேசிய பொம்பள சோக்கு கேக்குதாடா.. கேங்ஸ்டர்க்குனு ஒரு டிசிப்ளின் வேணும் என்ற வசனமும், விஷான் பேசிய அட பிளேபாய் மவனே என்ற வசனமும் ட்ரெண்டாகியது.

அதுமட்டுமல்லாமல் ட்ரெய்லரின் கடைசியில் வரும் சில்க் ஸ்மிதா காட்சி கூடுதல் வரவேற்பைப் பெற்றது. டைம் டிராவல் மூலமாக கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பயணிக்கும் விஷாலும், எஸ்ஜே சூர்யாவும் செய்யும் அட்டகாசங்களே மார்க் ஆண்டனி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

- Advertisement -

அதேபோல் மார்க் ஆண்டனி படத்தை எஸ்ஜே சூர்யா மாநாடு 2 போல் இருக்கும் என்றும், நடிகர் விஷால் பம்பரமாய் சுழன்று விளம்பரம் செய்வதால் மார்க் ஆண்டனி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் சந்திரமுகி 2 பாகமும் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகியது.

- Advertisement -

இதனால் மார்க் ஆண்டனி படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்ததால் அந்த படத்தின் முன்பதிவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் நாளைய நாளுக்கான ஷோக்களில் சுமார் 29 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விஷாலின் கம்பேக் படமாக இது இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular