Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentகுட் நைட் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பே வேறயாம்… இந்த தலைப்பை மட்டும் வச்சிருந்தா படம்...

குட் நைட் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பே வேறயாம்… இந்த தலைப்பை மட்டும் வச்சிருந்தா படம் சீக்கிரமா ரீச் ஆயிருக்குமே… மிஸ் பண்ணிட்டாங்க போங்க!

குட் நைட் திரைப்படத்திற்கு முதலில் மோட்டார் மோகன் என தலைப்பு வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மெல்ல மெல்ல வரவேற்பை பெற்ற குட் நைட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி, ஜெய் பீம் மணிகண்டன் நடித்த குட் நைட் ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகின. இதில் கஸ்டடி திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் வழங்கப்பட்டன. ஆனால் மற்ற படங்களை சுமார் 100 முதல் 120 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது.

கடந்த மே மாதம் வெளியான குட் நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வெங்கட் பிரபுவின் கஸ்டடி, ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா, சாந்தனு நடித்த இராவணக்கோட்டம் ஆகிய திரைப்படங்கள், குட் நைட் திரைப்படத்துடன் வெளியாகி இருந்ததால் அந்தப் படத்திற்கு குறைவான காட்சிகள் மற்றும் குறைவான திரையரங்குள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. பின்னர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால், படம் ஹிட் அடிக்க வசூலையும் வாரி குவித்தது.

- Advertisement -

ரசிகர்களிடம் அமோக வரவேற்பு

ஜெய்பீம் படத்தில் நடித்த மணிகண்டன், இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் மணிகண்டனுடன் மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி, ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை மற்ற படங்களின் கதைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. குறட்டை விடுவதால் நாயகன் என்னென்ன பாடுபடுகிறான், அவனால் சுற்றியிருப்பவர்களுக்கு என்னென்ன அவஸ்தை ஏற்படுகிறது என்பதைப் பற்றிய காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது குட்நைட்.

- Advertisement -

திருச்சிற்றம்பலம், டாடா, அயோத்தி திரைப்படங்களுக்கு பிறகு நல்ல ஒரு பீல் குட் திரைப்படமாக குட் நைட் திரைப்படம் அமைந்திருப்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான முதல் நாளிலேயே யாரும் எதிர் பார்க்காத வகையில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல் அள்ளியது.

இதன் காரணமாக குட் நைட் திரைப்படத்திற்கு திரையரங்குகளின் காட்சிகள் அதிகரித்தன. அதிலும் ஒரு காட்சிகளை திரையிட்ட திரையரங்குகள் மூன்று காட்சிகள், நான்கு காட்சிகள் என அதிகரித்தன. தொடர்ந்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மோட்டார் மோகன்தான் தலைப்பாம்

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், இது போன்ற வரவேற்பு பெற்று நீண்ட நாட்கள் ஆவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், முதலில் குட் நைட் படத்திற்கு வேறொரு பெயர் வைக்கப்பட்டதாக தகவல் வழியாக உள்ளது. படத்தில் ஹீரோவான மணிகண்டனை, அவரது அலுவலகத்தில் அனைவரும் மோட்டார் மோகன் என்று அழைப்பார்கள். அந்த தலைப்பையே படக்குழு தேர்வு செய்ததாகவும், கடைசி நேரத்தில் குட் நைட் என்ற தலைப்பு பொருத்தமாக இருந்ததாக கருதி அதையே வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்துள்ள ரசிகர்கள், மோட்டார் மோகன் தலைப்பை நன்றாகத்தான் உள்ளது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular