Wednesday, October 2, 2024
- Advertisement -
HomeEntertainmentசூர்யா போனதால் அருண் விஜயை வைத்து வணங்கானை எடுத்து வரும் பாலா.. ஷூட்டிங்கில் மிஷ்கினும் இணைந்ததால்...

சூர்யா போனதால் அருண் விஜயை வைத்து வணங்கானை எடுத்து வரும் பாலா.. ஷூட்டிங்கில் மிஷ்கினும் இணைந்ததால் எகிறும் எதிர்பார்ப்பு

சூர்யாவின் திரையுலக பயணத்தின்ஆரம்ப காலத்தில், அவருக்கு நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தன. இருந்தாலும், அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமும், சூர்யா ஒரு சிறந்த நடிகர் என்றும் பரவலாக பேச வைத்தது நந்தா திரைப்படத்தில்தான். இப்படி சூர்யாவை உலகறிய செய்த, இயக்குனர் பாலா அடுத்ததாக பிதாமகன் படத்தை எடுத்து அதிலும் சூர்யாவை நடிக்க வைத்தார்.

- Advertisement -

படத்தில், பேசாத வெட்டியான் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் எவ்வளவு பேசப்பட்டாரோ, அதற்கு இணையாக கலகலப்பூட்டும் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவும் பேசப்பட்டார். நந்தா, பிதாமகன் என இரண்டு முக்கியமான படங்களை கொடுத்த பாலாவுக்கும், சூர்யாவுக்குமான இணக்கம் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நீடித்து வந்தது.

இப்படி இருக்க, கடந்த வருடம் பாலாவும் சூர்யாவும் புதிய படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. வணங்கான் என பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்பிரைசஸ் நிறுவனமே தயாரித்தது. பாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சூர்யாவின் கதாபாத்திரம் அடங்கிய போஸ்டரும் வெளியானது. இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றபோது, திடீரென சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

- Advertisement -

இதை உறுதிப்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிட்ட சூர்யா, வணங்கான் படப்பிடிப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து இயக்குனர் பாலா, நடிகர் அருண்விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் புதிய தகவலாக, இயக்குனர் மிஷ்கினும் வணங்கான் படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மிஷ்கினின் பிசாசு படத்தை பாலா தயாரித்திருந்தார். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இந்த சூழலில் பாலா இயக்கத்தில் மிஷ்கின் நடிக்க இருப்பது, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Most Popular