Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாகார்த்தியுடன் இணையும் நலன் குமாரசாமி… முழுக்க முழுக்க காமெடி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக தகவல்

கார்த்தியுடன் இணையும் நலன் குமாரசாமி… முழுக்க முழுக்க காமெடி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக தகவல்

நடிகர் கார்த்தி உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2வது பாகம் படம் கடந்த மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது. ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்று இந்த திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஆகி சாதனை புரிந்தது.

- Advertisement -

இந்தப் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கார்த்தி, அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி உருவாகி வரும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தினை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் எனக் கூறப்படும் நிலையில் எந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் – நலன் குமாரசாமி படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது முழுக்க முழுக்க பேண்டஸி காமெடி ஜானரில் இந்த படம் உருவாக இருக்கிறதாம். கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளாராம். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி உடன் கார்த்தி இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது

Most Popular