Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்ன கெட்ட வார்த்தை பேச வைக்காதீங்க..! இயக்குனர் மோகன் ஜி குறித்து நடிகரும்,ஒளிபதிவாளருமான நடராஜன் டிவீட்

என்ன கெட்ட வார்த்தை பேச வைக்காதீங்க..! இயக்குனர் மோகன் ஜி குறித்து நடிகரும்,ஒளிபதிவாளருமான நடராஜன் டிவீட்

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை படமாக எடுத்து காசு பார்ப்பவர் இயக்குனர் மோகன் ஜி. குறிப்பிட்ட சாதியினரை மட்டும் மையமாக வைத்து அவர்கள் தான் அனைத்து தவறுமே செய்கிறார்கள் என்பது போல் வன்மத்தை படமாக எடுப்பதில் மோகன் ஜி வல்லவர்.

- Advertisement -

இவர் எடுத்த பாகாசுரன், ருத்ரதாண்டவம், திரௌபதி போன்ற படங்கள் அதற்கு நல்ல உதாரணம். இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நடராஜனுக்கும் மோகன்ஜிக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

மோகன் ஜி அண்மையில் பாகாசுரன் படத்தில் நடராஜனை வைத்து ஹீரோவாக படம் எடுத்தார். நடராஜன் திறமையான நபராக இருந்தாலும், இருவரும் ஒரே கொள்கையில் உடையவர்கள். இதனால் தான் மோகன் ஜி படத்தின் நடிக்க நடராஜன் ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஒளிப்பதிவாளராக வளம் வந்தபவரும், ஹெச். வினோத் படத்தில் நடிகராக அறிமுகமான நட்ராஜ் ஏன் மோகன் ஜி படத்தில் நடிக்கிறார் என அனைவரும் கேள்வி கேட்டனர். இந்த நிலையில் மோகன் சிக்கும் நடராஜருக்கும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

திடீரென நடராஜன் மோகன்ஜியையும் ஜே எஸ் கே கோபி எனப்படும் பாஜக நிர்வாகி நம்ப வேண்டாம் என அண்மையில் ஒரு டிவிட் போட்டு இருந்தார். எனினும் அதனை அவர் உடனடியாக டெலிட் செய்து விட்டார்.

இதேபோன்று நான் கெட்ட வார்த்தை பேச மாட்டேன் என்னை பேச வைத்து விடாதீர்கள் என தற்போது ஒரு ட்விட் போட்டு உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இயக்குனர் மோகனை தான் நடராஜன் திட்டுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.அவர்களுக்குள் என்ன சண்டை ஏதேனும் பண மோசடி பிரச்சனையா என்ற தகவல் தகவல் தெரியவில்லை.

Most Popular