செய்திகள்

பையா 2 -வை கையில் எடுக்கும் லிங்குசாமி! ஹீரோ யார் தெரியுமா?

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் நடிகர் கார்த்தி திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தை பெற்றது. கிராம கேரக்டரில் கார்த்திகை பார்த்த மக்களுக்கு சிட்டி பையனாக வலம் வந்து அசத்தினார். பையா திரைப்படத்திற்கு பலமே அதன் இசையும் பாடலும் தான். பையா படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையால் வெளியான அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது.

Advertisement

இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமியின் சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இவர் கடைசியாக தெலுங்கு மற்றும் தமிழில் எடுத்த வாரியர் திரைப்படமும் தோல்வியை தழுவியது. ஏற்கனவே சண்டைக்கோழி 2 என தாம் எடுத்த படத்தில் இரண்டாவது பாகத்தை எடுக்கும் முயற்சி மேற்கொண்டார். இது முதல் பாகத்தில் மீதான எதிர்பார்ப்பினால் இரண்டாவது பாகம் ஓரளவுக்கு வசூலை கொடுத்தது. இதனால் தற்போது அதே பாணியை கையில் எடுக்க லிங்கு சாமி முடிவு எடுத்திருக்கிறார்.

கற்பனை வரட்சி காரணமாக தாம் எடுத்த பிரபலமான படங்களில் இரண்டாவது பாகத்தை எடுத்து அதில் காசு பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டார் லிங்கு சாமி. இதன் முதல் கட்டமாக தற்போது பையா 2 படத்தை லிங்கு சாமி எடுத்துக்க உள்ளார். இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்க உள்ளார். ஹூரோயினாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. பையா 2 படத்தின் கதை வேறு மாதிரியாக இருக்குமா? இல்லை பையா ஒன் படத்தில் தொடர்ச்சியாக இருக்குமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Advertisement

ஆனால் படத்தின் கதை முழுமையாக வேறாக வைத்துக் கொண்டு படத்தின் டைட்டிலை மட்டும் பையா என லிங்குசாமி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் கார்த்தியை தவிர பையா படத்தில் வேறு ஹீரோவை நினைத்துப் பார்க்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. பையா 2 படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்தால் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top