பொழுதுபோக்கு

மூர்த்தி, ஜூவா இடையே வெடிக்கும் மோதல் – பாண்டியன் ஸ்டோரில் என்ன நடக்கிறது?

வெள்ளித்திரையில் வெளிவந்த ஆனந்தம், வானத்தைப்போல போன்ற திரைப்படங்களில் வரும் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையை மையமாக கொண்டு இயங்கி வருகிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர்.

Advertisement

மூர்த்தி, ஜீவா, கதிர் ,கண்ணன் என்ற நான்கு அண்ணன் தம்பிகளும் அவர்களின் மனைவிமார்களும் பிள்ளைகளும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக  இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமாக என்று ஏங்கும் அளவிற்கு வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் வாழ்விலும் எவ்வளவு கஷ்டங்கள் வந்து போகிறது. சொந்த வீடு இழந்து கடையை இழந்து இப்படி எதை இழந்தாலும் ஒற்றுமையை இழக்காமல் வாழ்ந்து வரும் அண்ணன் தம்பிகள் வாழ்வில் தற்பொழுது ஒரு பெரும் திருப்பம் ஒன்று ஏற்பட இருக்கிறது.

Advertisement

கதிர், மூர்த்தி மற்றும் கண்ணனின் மனைவியாகிய தனம் ,முல்லை ஐஸ்வர்யா ஆகியோ ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கிறார்கள். இதனால் ஜீவாவின் மனைவி மீனா தான் ஒட்டு மொத்த குடும்பத்தையும் பராமரித்து வருகிறார்கள்.

அதேபோல் கதிர் ஹோட்டலை நடத்தி வருகிறார். கண்ணன் அரசு உத்தியோகம் பார்த்து வருகிறான்.
ஜீவாவும் மூர்த்தியும் அவர்களுடைய பாரம்பரிய தொழிலான மல்லிகை கடையை பார்த்து வருகிறார்கள். அதில் தலைமையில் இருக்கும் மூர்த்தி, ஜீவாவிற்கு சம்பளம் தருவதும் இல்லை. சரியாக நடத்துவதுமில்லை என்று இவர்களுக்குள் தற்பொழுது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.
அனைவரையும் சமமாக நடத்தினால்தான் ஒற்றுமை இருக்கும். அது சற்று குறைவு ஏற்பட்டாலும் யாராயினும் மனம் வலிக்கத்தான் செய்யும்.

அந்த வகையில் கண்ணன் மற்றும் கதிர் ஆகியோர் தான் சம்பாதிக்கும் பணத்தை மனைவிக்காக செலவு செய்யக் கூடிய அளவிற்கு சற்று சேர்த்தும் வைத்திருக்கிறார்கள். ஜீவாவிற்கு அந்த வாய்ப்பு இல்லை. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மீனாவை சரியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையாலும் தன்னை தன் சகோதரர்கள் ஒழுங்காக நடத்துவது இல்லை என்ற எண்ணத்தாலும் தற்பொழுது மூர்த்திக்கும் ஜீவாவுக்கும் இடையில் ஒரு பெரிய சண்டை ஏற்பட போகிறது .

மீனாவின் தந்தை  ஆசைப்பட்டது போல் மீனாவும் ஜீவாவும் தனிக்கொடத்திலும் சென்று விடுவார்களா இல்லை மாமனார் வீட்டோடு ஜீவா சென்று விடுவாரா?  இல்லை என்ன ஆனாலும் என் என் சகோதரர்களே விட்டு வரமாட்டேன் என்று ஒற்றுமையாக மீண்டும் ஒரு குடும்பமாக வாழ்வார்களா என்பது பார்வையாளர்களுக்கு கேள்வி குறியாக உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top