பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவும் சென்ற 11ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. துணிவு படத்தின் முதல் காட்சி இரவு 1 மணிக்கும் வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது. 2 பெரிய தலைகளின் படங்களும் ஒன்றாக வந்ததால் முதல் காட்சிகளுக்கு பெயர் போன பிரபல திரையரங்குகள் ரோகினி, ராம் முத்துராம் இம்முறை கூடுதல் கோலாகலமாக காணப்பட்டது.
விஜய் மற்றும் அஜித்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பது அனைவர் அறிந்தது. சமீபத்தில் அது மேலும் உயர்ந்துள்ளது. இருவரின் ரசிகர்களும் அவரவர்ளின் விருப்பாமான நடிகர்களின் மேல் அளவற்ற பாசம் வைத்திருப்பது பொதுவான ஒன்று தான். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் அது சென்றால் நிச்சயம் பொது ஆபத்து தான்.
இந்த விஷயத்தில் அஜித்குமார் அவர்கள் மிகவும் பெருந்தன்மையானவர். தன் ரசிகர் பட்டாளத்தை களைத்து அனைவரையும் சரியாக நேரத்தை பயன்படுத்தி அவரவர் வாழ்கையை பார்குமாரும் நேரம் கிடைக்கும் போது மட்டுமே தன் படத்தை பார்க்க வருமாறு அழைத்தார். ஆனால் இதுவரை அவரது ரசிகர்கள் அதை செய்யாமல் வருடாவருடம் கொண்டாட்டத்தின் பெயரில் பல வம்புகளை கூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வருடம் முதல் காட்சி கொண்டாட்டத்தின் போது ரோகினி வாசலில் நின்று கொண்டிருந்த லாரியின் மேல் 19 வயது அஜித் ரசிகர் ஒருவர் ஏறி டான்ஸ் ஆடும் போது கீழே விழுந்து பரிதாமாக உயிர்விட்டார். தற்போது அஜித் படத்தின் போது தான் தன் மகன் உயிரிழந்தார் எனக் காரணம் காட்டி பெற்றோர்கள் அஜித்தையும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தையும் தங்களுக்கு 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேட்கின்றனர். இது எவ்விதத்தில் நியாயம் என மக்கள் அனைவரும் ஒரு பக்கம் கேட்டு வருகின்றனர்.
இதுவும் ஒரு வகையான நூதன திருட்டு தானே. உயிரழந்த பையன் தன் கொழுப்பினால் இவ்வுலகை விட்டு வெளியேறியதற்கு அஜித்குமார் என்ன செய்வார் !? அவரா வந்து ஆடச் சொன்னார் ? என சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அஜித்குமார் அவர்களே பெரிய மனது வைத்து கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு மிரட்டி வேண்டுமென்றே கோரிக்கை வைத்து வாங்குவது ஓர் வகையான திருட்டு தான். அவர்கள் கேட்கும் அந்த பணம் அவர்களுக்கு கிடைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.