சினிமா

தமிழ் சினிமாவில் களம் பாதிக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்… !

Paridhabangal gopi sudhakar new movie

பிரபல நகைச்சுவை தமிழ் யூடியூபர்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர்கள் பரிதாபங்கள் கோபி & சுதாகர். இவர்களுக்கும் மைக்செட், நக்கலைட்ஸ், எருமசானி போன்ற குரூப்களுக்கும் தான் போட்டியே. வாரம் தவறாமல் டிரெண்டிங் கண்டன்ட்டை வைத்து வீடியோ போட்டு சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய சினிமாவில் காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கிறது. யூடியூப்பில் கோபி சுதாகர் வீடியோ பார்த்து மகிழ்பவர்கள் பலர் இவர்கள் தான் அடுத்த சினிமாவின் கவுண்டமணி செந்தில் என்ற அளவிற்கு புகழ்ந்துள்ளனர். ஆனால் இன்னுமும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர்கள் படம் செய்யவில்லை.

Advertisement

இருவரும் யோகி பாபுவின் ஜாம்பி படத்தில் துணை நடிகர்களாக நடித்திருப்பார்கள். அதில் பெரிதாக கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு ஏதும் இல்லை. சுதாகர் மட்டும் தனியாக உறியடி 2 படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. பரிதாபங்கள் புரொடக்ஷனில் மக்களிடம் பணம் சேர்த்து ‘ ஏ மணி கம்ஸ் டுடே கோஸ் டுமாரோ யா ’ என்ற படத்தை உருவாக்கி வருவதாக சில ஆண்டுகள் முன்னர் தெரிவித்தனர், ஆனால் இன்னும் அது வெளியாகவில்லை.

நடுவில் அது மோசடி எனவும் காண்பிக்கப்பட்டது, பின்னர் அதெல்லாம் கட்டுக்கதை எனக் கூறி சமாளித்துவிட்டனர். தற்போது அவர்கள்து புரொடக்ஷனுக்கு கீழ் 2வது படத்தை விஷ்ணு விஜயம் இயக்குகிறார். முதல் தர நடிகர்களாக கோபி – சுதாகரே சிறப்பிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Advertisement

இன்று முதல் பணியாக படத்திற்கு பூஜை விசேஷம் செய்தனர். இருவரும் ஒன்றாக சில்வர் ஸ்க்ரீனில் களம் பதிப்பதைக் காண ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விஜய் டிவி, மீம்ஸ் சென்ட்ரல் சேனல்களில் இருந்து வெளியேற்றப்பட்டப் பின் பரிதாபங்கள் என புதிய சேனல் மூலம் தங்களுக்கென்று ஓர் சிம்மாசனத்தை உருவாக்கி இன்று தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top