Wednesday, April 17, 2024
- Advertisement -
Homeசெய்திகள்ஷாரூக்கான் பத்தான் படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஷாரூக்கான் பத்தான் படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

- Advertisement -

பாலிவுட் சினிமாவையே காப்பாற்றிய பெருமை ஷாருக்கான் நடித்த பத்தான் திரைப்படத்திற்கு தான் சேரும். கொரோனாவுக்கு பிறகு தொடர்ந்து பாலிவுட் படங்கள் படுதோல்வையை தழுவியது. ஆனால் மற்ற மொழி திரைப்படங்களான கேஜிஎப், ட்ரிபிள் ஆர் போன்ற படங்கள் எல்லாம் பெரும் வசூலை வாரி குவித்தது.

இதனால் பாலிவுட் எதிர்காலம் என்ன ஆகும் என ஒட்டுமொத்த ஹிந்தி சினிமாவுமே கலக்கத்தில் இருந்தன. இந்த நிலையில் தான் ஷாருக்கான் பல ஆண்டுகளுக்குப் பிறகு பதான் என்ற திரைப்படம் மூலம் திரும்பினார். கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை குவித்தது. ஹிந்தியில் மட்டும் 500 கோடி வசூலை இந்த படம் படைத்தது.

- Advertisement -

தமிழில் 15 கோடி ரூபாய்க்கு மேலும் தெலுங்கில் ஆறு கோடி ரூபாய்க்கு மேலும் இந்த படம் வசூல் வாரி குவித்தது. இதன் மூலம் ஹிந்தி சினிமாவை தனி ஆளாக ஷாருக்கான் தூக்கி நிறுத்தினார். இது இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் பாண்க் ஸ்பை திரில்லர் படங்களை கதைக்களமாக கொண்டது. இது ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும் வில்லனாக ஜான் ஆபிரகமும் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் பத்தான் திரைப்படம் அமேசான் பிரைமில் 22ஆம் தேதி நாளை ரிலீஸ் ஆகிறது. இதனால் ஒட்டுமொத்த ஷாருக்கான் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தை பார்க்க தவறிய தமிழக ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. ஏனென்றால் இந்த படம் தமிழிலும் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. பத்தான் படத்தில் ஓடிடி ரிலீசில் ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது.

திரையரங்கில் நீக்கப்பட்ட பத்து நிமிட காட்சிகள் பத்தான் ஓடிடியில் சேர்த்து ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷாருக்கான் ரசிகர்கள் அமேசான் பிரைம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். தற்போது ஷாருக்கான் அட்லீயுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular