Friday, April 26, 2024
- Advertisement -
Homeசெய்திகள்ஹாட்ரிக் அடித்தாரா சிம்பு? - பத்து தல திரைப்படம் எப்படி இருக்கு?

ஹாட்ரிக் அடித்தாரா சிம்பு? – பத்து தல திரைப்படம் எப்படி இருக்கு?

- Advertisement -

நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. சிம்பு திரைப்பட வாழ்க்கையில் அதிக திரையரங்குகளில் ரிலீசான திரைப்படம் என்ற பெருமையை பத்துதல பெற்றிருக்கிறது.

எனினும் இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வில்லை. இதனால் படம் காலை 8 மணிக்கு தான் தொடங்கியது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். பத்து தலயில் நடிகர் சிம்பு மிரட்டி இருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் சிலர் நடிகர் சிம்புவை இப்படி தாங்கள் பார்த்ததில்லை என்றும் இது சிம்பு படம் போல் இல்லாமல் சூப்பர் ஸ்டார் படம் போல் இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள். நடிகர் சிம்பு வரும் இண்டர்வெல் காட்சி படத்திற்கு வலு சேர்ப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை பத்து தல படத்தின் முதுகெலும்பு போல் இருப்பதாகவும் அவர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதனால் பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று இருக்கிறது. ஒரு சில படம் கொஞ்சம் ஸ்லோவாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பத்து தல திரைப்படம் சிம்புவுக்கு மட்டும் இல்லாமல் கௌதம் கார்த்திக் மிகப்பெரிய கம்பேக்கை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.

கௌதம் கார்த்திக் பத்து தல மூலம் கம்பை கொடுத்திருக்கும் இயக்குனர் ஒபேலி கிருஷ்ணா படத்தை சிறப்பாக இயக்கியிருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். இது போன்ற பத்து தல திரைப்படத்தில் தொழில் நுட்பக் கலைஞர்கள் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிவதாகவும் அது படத்தின் தரத்தை மேலும் கூட்டுவதாகவும் விமர்சனம் வந்திருக்கிறது.

இதன் மூலம் நடிகர் சிம்பு மாநாடு வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து பத்து தல மூலம் ஹட்ரிக் வெற்றியை பெற்றிருக்கிறார். இதனை சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் மார்ச் மாதம் முழுவதும் வசூல் இல்லாமல் இருந்த திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

Most Popular