Thursday, April 18, 2024
- Advertisement -
Homeசினிமாயூ டியூப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம்.. விஜய் ஆண்டனி அதிரடி முடிவு

யூ டியூப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம்.. விஜய் ஆண்டனி அதிரடி முடிவு

- Advertisement -

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் நான், சலீம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் அவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திராவில் பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இதனால் விஜய் ஆண்டனியின்  திரைப்பட வாழ்க்கை வேறு ஒரு தளத்திற்கு சென்றது. இதனைத் தொடர்ந்து அர்ஜுன் உடன் கொலைகாரன், காளி சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. கொரோனாவிற்கு பிறகு வெளியாகி முதல் ஹிட் அடித்த படம் என்றால் அது கோடியில் ஒருவன் திரைப்படம் தான். தமிழகத்தில் 10 கோடி ரூபாய் வசூலை அந்த படம் பெற்றது.

- Advertisement -

இதனால் விஜய் ஆண்டனிக்கு தமிழ்நாட்டில் நல்ல மார்க்கெட் இருந்தது. இந்த நிலையில் தனக்கு சினிமாவில் ஒரு அந்தஸ்தை கொடுத்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது விஜய் ஆண்டனி நடித்து, இசை அமைத்து இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக விஜய் ஆண்டனி ஒரு புதிய முடிவு எடுத்துள்ளார். அதன்படி பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிடங்கள் யூட்யூபில் தற்போது வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் இடம்பெற்றுள்ள காட்சி படம் எந்த மாதிரி இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. இதில் மூளை மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக ஒரு பேட்டி இடம் பெற்றுள்ளது. இதில் மூளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நல்லவர்களை வாழ வைக்கலாம் என்று மருத்துவர் பேசும் போது இதனை ஹிட்லர் போன்ற தீயவர்கள் பயன்படுத்திக் கொண்டால் என்ன ஆகும் என்று செய்தியாளர் கேட்கிறார். அதை வில்லன் ஒருவன் பார்க்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

பணம் இந்த உலகத்திற்கு கேடு என்ற ஒற்றை வரியை வைத்து மீண்டும் பிச்சைக்காரன் படத்தில் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் முதல் பாகம் தாய் பாசத்திற்காக அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் அதை தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

Most Popular