சினிமா

“சபாஷ்.. சரியான போட்டி” விக்ரம் வசூலை மிஞ்சும் பொன்னியின் செல்வன் – 1 ! ஒரே வாரத்தில் 300+ கோடியாம் ; தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா ?

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூலான தொகை 300 கோடியை தாண்டி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல எழுத்தாளர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’. ஜெயம் ரவி துவங்கி கார்த்திக், விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் மற்றும் பலர் என ஏராளமான நடிகர்கள் பட்டாளமே நடித்து பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்.

Advertisement

இந்திய சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம் இயக்கத்தில் இப்படம் வெளிவந்ததால் கூடுதல் எதிர்பார்ப்பும் நிலவியது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. படம் வெளியாகி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியும் இன்னும் பல திரையரங்குகள் முழுவதுமாக நிறைந்த வண்ணம் இருக்கின்றன. முக்கிய நகரங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை எனவும் தகவல்கள் வருகிறது.

படத்தின் முதல் பாகம் வெளியான நாள் முதல் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என காண்பதற்கு ஆவலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு காட்சி அமைப்பும் கதைக்களமும் நாவலில் இருப்பது போலவே காட்சிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Advertisement

படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் தியேட்டரில் இன்னும் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு பலரையும் கவர்ந்திருக்கும் இத்திரைப்படம் எவ்வளவு வசூலை பெற்றது என்று தெரிந்து கொள்வதற்கு பலரும் ஆவலுடன் இருக்கின்றன.

அக்டோபர் ஆறாம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மட்டும் சுமார் 125 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஆகியுள்ளது கர்நாடகாவில் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை எட்டியுள்ளது. வட மாநிலங்களில் ஹிந்தியில் வெளியாகி சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றது. கேரளா மற்றும் தெலுங்கானா இரண்டையும் சேர்த்து சுமார் 38 கோடி ரூபாய்க்கு வசூல் ஆகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகியுள்ளது. வெளிநாடுகளில் 100 கோடிக்கும் மேல் வசூலை எட்டி இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக உலகெங்கிலும் சேர்த்து சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை பெற்றிருக்கிறது. சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை எட்டியது. அதைவிட ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ விரைவாக இந்த வசூலை எட்டி இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top