Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாமாமன்னன் படமே ஓடிடியில் வந்துருச்சு.. போர் தொழில் எப்போது வரும் ? வெளியாகியுள்ள சூடான அப்டேட்.....

மாமன்னன் படமே ஓடிடியில் வந்துருச்சு.. போர் தொழில் எப்போது வரும் ? வெளியாகியுள்ள சூடான அப்டேட்.. !

இந்த ஆண்டு வெளியான பெரிய படங்களைக் காட்டிலும் சின்ன சின்ன படங்களே அதிக கவனத்தைக் கவர்ந்தன. அப்படியான படத்தில் ஒன்று தான் போர் தொழில். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய இந்தப் படம் ராட்சசன் திரைப்படத்திற்குப் பின் சிறந்த கிரைம் த்ரில்லர் என்றெல்லாம் விமர்சனத்தைப் பெற்றது.

- Advertisement -

அசோக் செல்வன் – சரத்குமார் காம்போ முதன்மை நடிகர்கர்களாக நடித்தனர். சற்று பதட்டமான குணத்தைக் கொண்ட அசோக் செல்வனும் அதீக கோபா அடையும் கதாபாத்திரத்தில் சரத்குமாரும் இணைந்து சைக்கோ கொலையாளியை கண்டுபிடிப்பதே கதை.

திருச்சி மாவட்டத்தைக் சுற்றியுள்ள காடுகளில் பெண்களின் கையை பின்புறம் வாயோடு கட்டி கொள்கிறான் ஒரு சைக்கோ. அந்தக் கொலையாளியை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கும் இரு காவல்துறையினர் ஒரு கட்டத்தில் தப்பான திசையில் பயணிக்க படம் இன்னும் சூடு பிடிக்கிறது.

- Advertisement -

ராட்சான் திரைப்படத்திற்குப் பிறகு மிகவும் விறுவிறுப்பான ஓர் த்ரில்லர் படமாமாக இது அமைந்துள்ளது. இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க கூட்டம் கூட்டமாகச் சென்றனர் மக்கள். திரைப்படம் வெளியாகி ஒன்றரை மாதம் ஆகியும் இன்னும் ஓடிடி தளத்தில் வெளியாகவில்லை. ஒவ்வொரு வாரமும் அதற்காக ஒரு தரப்பு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாற்றமடைகின்றனர்.

- Advertisement -

ஜூன் 30ஆம் தேதி வெளியாகிய மாமன்னன் திரைப்படமே இன்று ஜூலை 27 நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிவிட்டது. ஆனால் இன்னும் போர் தொழில் வரவில்லையே என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பெரிதாக எழுப்பப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய ஓர் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

போர் தொழில் ஓடிடி ரீலீஸ் எப்போது

மே மாதம் வெளியாகி ஜூலையில் ஓடிடி ரீலீஸ் கண்ட குட் நைட் படத்தைப் போலவே போர் தொழிலும் செய்கிறது. தற்போது கிடைத்துள்ள செய்திகளின் படி இந்த வாரமும் போர் தொழில் ஓடிடியில் கிடைக்காது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 4ஆம் தேதி நிச்சயம் சோனி லிவ் தளத்தில் வந்துவிடும்.

Most Popular