கடந்த மாதம் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது ஆதிபிருஷ் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் ராமனாக பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடித்திருந்தார். மேலும் சீதையாக பாலிவுட் நடிகை கீர்த்திசனும் மற்றும் ராவணனாக சைஃப் அலி கான் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தின் இயக்குனரான திரைப்படத்தை ராமாயண கதையை மையமாகக் கொண்டு இயக்கியிருந்தார். மேலும் இதை ஒரு ராமாயண நாடகத்திற்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்து வெளியிட்டிருந்தார். அதன் காரணத்தினால் தான் அனுமருக்கென்று ஒரு சீட்டை கேட்டிருந்தார் இயக்குனர் ஓம்ராவத்.
ஏற்கனவே திரைப்படத்தின் உடைய 3டி காட்சிகள் கேளிக்கை போல் இருக்கிறது என்று கேலி செய்யப்பட்டு வந்த நிலையில் உம்ராவத்துடைய இந்த வேண்டுகோள் பல விமர்சனங்களுக்கு உள்ளானது.
இத்திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பே திரைப்படத்தின் மீது பலருக்கும் எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது. இத்திரைப்படம் வெளியிட்ட பிறகும் முதல் நாளில் 100 கோடி ரூபாய் வசூலை வேட்டையாடியது. ஆனால் அது படிப்படியாக குறைந்து மொத்தமாகவே 300-ல் இருந்து 350 கோடி வரை தான் இத்திரைப்படம் வசூலை பெற்றது.
தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் என பேன் இந்தியன் மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் எல்லா மொழிகளிலுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவியது.
இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார்.
அதற்குப் பிறகு நடிகர் பிரபாஸிற்கு என்றே பல ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ராமாயணம் போன்ற புராணக் கதைகளின் கதாநாயகனாக நடிப்பதற்கு பிரபாஸ் தகுதியானவர் என்று ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது.
அது எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்தது ஆடி புருஷ்த் திரைப்படம். ராமனாக நடித்த பிரபாஸை பாரபட்சம் இன்றி ரசிகர்கள் கேலி கிண்டல் செய்து விட்டார்கள். சினிமாவில் அவருக்கென்று இருந்த உயரமே குறைந்து விட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர் பிரபாஸை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் ஓம்ராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார். முதல் திரைப்படத்தில் வந்த விமர்சனங்களை தொடர்ந்து இனியும் இது போன்ற ஒரு தவறை செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக நடிகர் பிரபாஸ் ஒம்ராவுக்கு இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.