Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாலேடி விஜய் சேதுபதி தான் நம்ம பிரியா பவானி ஷங்கர்.. ! கையில் 4 படங்களுடன்...

லேடி விஜய் சேதுபதி தான் நம்ம பிரியா பவானி ஷங்கர்.. ! கையில் 4 படங்களுடன் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியீடு.. !

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார் பிரியா பவானி ஷங்கர். தொடர்ந்து அவரது படங்கள் வெளியாவது அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆவது என அடுத்தடுத்து அவரைப் பற்றிய அப்டேட்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. கடந்து ஆண்டு 4 படங்கள் மற்றும் ஓர் வெப் சீரிஸ் எப்பிசோடில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த ஆண்டு இதுவரை பத்து தல, ருத்ரன், அகிலன் ஆகிய தமிழ் படங்களும் கல்யாணம் காமணீயம் எனும் ஓர் தெலுங்கு படமும் வெளியாகியுள்ளது. நாளை எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்த பொம்மை படம் ரீலீஸ் ஆகிறது. இந்த 4 படங்கள் தவிர்த்து இன்னும் சில படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரியா பவானி ஷங்கரின் கையில் இன்னும் இருக்கும் பிரபல படங்கள் இந்தியன் 2, டிமான்டி காலனி 2, அரண்மனை 4 ஆகும். இது இல்லாமல் தெலுங்கு படங்களும் உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் அடுத்தடுத்து படங்களை குவித்த விஜய் சேதுபதிக்கு ஈடு கொடுத்து படங்கள் நடிக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

- Advertisement -

நேற்று பிரியா பவானி ஷங்கரின் மற்றொரு படத்தின் ஒப்பந்தச் செய்தி வெளியானது. நடிகர் விஷாலுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார். நடிகர் விஷாலின் 34வது படத்தில் இயக்குனர் ஹரியின் தலைமையில் சேர்கிறார். படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகும்.

- Advertisement -

இந்தப் படத்தில் முதலில் தெலுங்கு நடிகை ஶ்ரீ லீலா நடிக்கவிருந்தார். ஆனால் தேதிப் பிரச்சினைகளால் அவரால் நடிக்க இயலவில்லை. உடனே படக்குழு பிரியா பவானி ஷங்கரை அணுகி உறுதி செய்தது. ஏற்கனவே ஹரியின் தலைமையில் சென்ற ஆண்டு வந்த யானை படத்தில் நடித்த அனுபவம் பிரியா பவானி ஷங்கருக்கு இருக்கிறது.

மார்க் ஆண்டனி பட வெளியீடு அடுத்து மாதம் ஆகும். அந்தப் பணியில் விஷால் மிகவும் பிஸியாக உள்ளார். விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஹரி துவங்கவிருக்கிறார். தமிழ்நாடு, ஆந்திராவில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் படத்தை திரையரங்கில் எதிர்பார்க்கலாம்.

Most Popular