தமிழகத்தில் கடந்த 11ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரிலீசான நிலையில் அதன் தெலுங்கு டப்பிங் ஆன வாரிசுடு திரைப்படம் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரைக்கு வந்தது. சுமார் 385 தியேட்டர்களில் இந்த திரைப்படம்வெளியிடப்பட்டிருக்கிறது .தெலுங்கு நட்சத்திர இயக்குனரான வம்சி. நட்சத்திர நடிகர்களான ஸ்ரீகாந்த், ராஷ்மிகா மந்தானா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் தெலுங்கு ரசிகர்களுடைய வாரிசு திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலை படம் ரீலிசான பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். ஹைதராபாத்தில் உள்ள சுதர்சன் திரையரங்கில் வாரிசுடு திரைப்படத்திற்கு ஆயிரம் கணக்கான ரசிகர்கள் குவிந்து படத்தை கொண்டாடினர். இந்த நிலையில் ஐதராபாத்தில் திரையரங்கு ஒன்றில் நேரடியாக வந்த தயாரிப்பாளர் தில் ராஜு ரசிகர்களுக்கு ஷாக்களிக்கும் விசயத்தை ஒன்று செய்தார்.
பொதுவாக தயாரிப்பாளர்கள் அனைவரும் முதலாளி என்ற தோணியிலே இருப்பார்கள். ஆனால் இங்கு தில் ராஜ் திடீரென்று தம் கையில் எடுத்து வந்திருந்த பேப்பர் எடுத்து தூக்கி வீசி ரசிகர்களோடு ரசிகர்களாக கொண்டாடினார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே வாரிசுடு திரைப்படம் விஜய் சினிமா வரலாற்றில் தெலுங்கில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் வசூலை 10 கோடிக்கு மேல் தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த 11ம் தேதி ரிலீசான துணிவு திரைப்படம் ஆந்திராவில் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் அளவில் வசூல் செய்துள்ளது. தற்போது துணிவு தெலுங்கு டப்பிங் படம் 50 திரையரங்குகளுக்கு மேல் ஓடி வருவதால் இன்று முதல் அந்த படம் லாபத்தை விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.