சினிமா

“ தளபதி 67 மோஷன் போஸ்டர் எப்போது ? ” சூடான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளார் லலித் குமார்… !

Lalit kumar about thalapathy 67 update

தளபதியின் வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. இயக்குனர் வம்சி பைடிபள்ளியின் கமர்ஷியல் சென்டிமென்ட்டை குடும்பங்கள் கொண்டாடி வருகிறது. பொங்கல் விடுமுறையில் அமோகமான வசூல் மூலம் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் டிஸ்ட்ரிபியூட் செய்தனர்.

அந்த நிறுவனம் தான் விஜய்யின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான தளபதி 67 படத்தை தயாரிக்கிறது. இரண்டாவது முறை விஜய்யை இயக்கும் லோகேஷ் கனகராஜ், பல மாதங்களுக்கு முன் இப்படத்தை உறுதி செய்துவிட்டார். ஆனால் அதிகாரபூர்வமாக எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

Advertisement

வாரிசு படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த போது, “ வாரிசு படத்திற்காக தான் காத்திருந்தோம். விரைவில் அவ்வப்போது தரமான அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கும் கவலைப் படாதீர்கள். ” என்றார் லோகேஷ் கனகராஜ்.

இன்று தயாரிப்பாளர் லலித் குமாரைக் கண்ட செய்தியாளர்கள் அவரிடமும் இப்படத்தைப் பற்றியே கேட்டனர். அதற்கு அவர் “ இன்னும் 10 நாட்களில் அழைத்து அப்டேட்களும் வரும். ” என்றார். மிஸ்க்கின் நடித்திருப்பதைக் கேட்ட போதும் மற்ற தளபதி 67 சம்மந்தமான கேள்விகள் அனைத்திற்கும் “ 10 நாட்கள் காத்திருங்கள். ” எனும் ஒரே பதிலைத் தான் திரும்ப திரும்ப கொடுத்தார்.

Advertisement

மேலும் வாரிசு படத்தின் கலெக்ஷனைப் பற்றி கேட்டதற்கு, “ அது இன்னும் ஒரு வாரத்தில் உங்களை வந்துச் சேரும். ” என சொல்லிவிட்டு நடையைக் காட்டினார். வாரிசு பட வசூலை விட விஜய் ரசிகர்களுக்கு தளபதி 67 மேல் தான் அதிக ஆர்வம். சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ரக்ஷித் ஷெட்டி, பிக் பாஸ் ஜனனி என மாபெரும் படை இப்படத்தில் சிறப்பிகின்றனர். படத்தில் தளபதியின் மகளாக ஜனனி நடிக்கிறார், மேலும் படத்தில் விஜய் 50+ வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top