Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாகாளைக்கு பயிற்சி செய்ய இத்தனை செலவா? - வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு

காளைக்கு பயிற்சி செய்ய இத்தனை செலவா? – வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு

நடிகர் சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கும் படம் என்றால் அது வாடிவாசல் தான். கங்குவா படம் அவருடைய திரைப்பட வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் ரசிகர்களின் கண்கள்  அனைத்தும் வாடிவாசல் மீது உள்ளது.

- Advertisement -

ஏனென்றால் இதற்கு காரணம் தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த இயக்குனரான வெற்றிமாறனுடன் சூர்யா இணைவது தான். வெற்றிமாறன் எப்போதுமே அடித்தட்டு மக்கள் கதையை வித்தியாசமான கதை களத்தில் சொல்வது வழக்கம். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு தொடங்கியது.

- Advertisement -

எனினும் நடிகர் சூர்யா தமக்கு இன்னும் பயிற்சி தேவை என்று படத்தை தள்ளி வைத்ததாக தகவல் வெளியானது. எனினும் சூர்யா அதன் பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்தார். இந்த நிலையில் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தையும் முடித்து விட்டார்.

- Advertisement -

இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு வாடிவாசல் படத்திற்கான பணிகளில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு, வாடிவாசல் படத்திற்கு ஏற்கனவே பணிகள் தொடங்கி விட்டதாக கூறியுள்ளார்.

வாடிவாசல் படத்திற்கு எங்கு சென்றாலும் ரசிகர்கள் அதை பற்றி கேள்வி கேட்பதாகவும் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தாணு, படத்திற்கான சில சிஜி பணிகள் ஏற்கனவே லண்டனில் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

மேலும் வாடிவாசல் படத்திற்கு காளைகளை தயார் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், இதற்காக இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். படத்திற்காக காளைகளை தயார் செய்ய இத்தனை கோடி ரூபாய் செலவாகுமா என்று ரசிகர்கள் இதைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர். காளைகளுக்கு இவ்வளவு செலவு என்றால் படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Most Popular